ETV Bharat / city

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் காலமானார்! - எம்ஜிஎம் மருத்துவமனை

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.

வித்யாசாகர்
வித்யாசாகர்
author img

By

Published : Jun 29, 2022, 7:02 AM IST

Updated : Jun 29, 2022, 10:00 AM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் மீனா. ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். அன்புள்ள ரஜினிகாந்த், என் ராசாவின் மனசிலே, வீரா, எஜமான், அவ்வை சண்முகி, நாட்டாமை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர்.

இவருக்கும் பெங்களூருவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் இன்ஜினியர் வித்யாசாகர் என்பவருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று இரவு 9.30 மணியளவில் சென்னை எம்ஜிஎம் மருத்துவமனையில் உயிரிழந்தார். எம்ஜிஎம் மருத்துவமனையில் ஒரு வாரம் இதயம் மற்றும் நுரையீரல் செயல்படாமல் எக்மோ தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: நடிகர் 'பூ' ராமு காலமானார்!

Last Updated : Jun 29, 2022, 10:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.