ETV Bharat / city

பீஸ்ட் படம் பார்த்த ரஜினி - என்ன சொன்னார் தெரியுமா?

author img

By

Published : Apr 14, 2022, 8:35 PM IST

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படத்தை பார்த்த ரஜினிகாந்த், எந்த கருத்தும் கூறாமல் சென்றுவிட்டதால், படக்குழு அதிருப்தி அடைந்துள்ளது.

beast
beast

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம், நேற்று (13.4.2022) வெளியானது. தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் இப்படம், ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் பீஸ்ட் படத்தை நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். சன் குழும அலுவலகத்தில் அவருக்கு பிரத்யேகமாக படத்தை போட்டுக்காட்டியுள்ளனர். படத்தைப் பார்த்த ரஜினி, தலையை மட்டும் ஆட்டிவிட்டு எதுவும் கூறாமல் சென்றதாக கூறப்படுகிறது.

ரஜினிகாந்த் கருத்து கூறாமல் போனதால், படக்குழு அதிருப்தி அடைந்துள்ளனர். ரஜினியின் அடுத்த படத்தை நெல்சன் திலீப்குமார் தான் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழில் புத்தாண்டு வாழ்த்து கூறிய ராம் சரண்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.