ETV Bharat / city

பாரதிராஜாவை கேள்வி கேட்பதற்கு கமீலா நாசருக்கு எந்தத் தகுதியும் இல்லை - நடிகர் ஜவஹர் - Actor Nassar

சென்னை: இயக்குநர் பாரதிராஜாவை பற்றி கமீலா நாசருக்கு பேச எந்த தகுதியும் இல்லை என நடிகர் நாசரின் சகோதரர் ஜவஹர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Actor Jawahar Twitter post
Actor Jawahar Twitter post
author img

By

Published : Aug 9, 2020, 9:06 PM IST

சமீபத்தில் இயக்குநர் பாரதிராஜா புதிய தயாரிப்பாளர் சங்கம் ஒன்றை தொடங்கினார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து வரவேற்பும், எதிர்ப்பும் எழுந்தன. இதனையடுத்து, தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தயாரிப்பாளர்கள் ஒன்றுகூடி ஆலோசனை செய்தனர். ஆலோசனையின் முடிவில் தாணு, கே ராஜன், கமீலா நாசர் ஆகியோர் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய கமீலா நாசர்; தன்னை சங்கம் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம், குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று பாரதிராஜா கூறியுள்ளார். புதுமைப்பெண் படம் எடுத்த அவர் எப்படி இப்படி கூறலாம் என்றார்.

கமீலா நாசரின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகர் நாசரின் சகோதரர் ஜவஹர் வீடியோ ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ் திரை உலகிற்கு ஒரு முன்னுதாரணம் இயக்குநர் பாரதிராஜா. அவரை தவறாக பேசுவதற்கு கமீலா நாசருக்கு எந்தத் தகுதியும் இல்லை. நாசரின் மனைவி என்ற ஒரே ஒரு தகுதியை வைத்துக் கொண்டு மிகப்பெரிய இயக்குநரை தரக்குறைவாக பேசுவது மிகவும் கண்டனத்திற்குரியது. இதுபோன்று தன்னைப் புதுமைப் பெண் என்று கூறிக்கொள்ளும் கமீலா நாசர் தன் மாமனார், மாமியார், மனநலம் பாதித்த மச்சினர் ஆகிய உறவுகளை கைவிட்டவர். இவரா புதுமைப்பெண், தன் சொந்த குடும்பத்தை பாதுகாக்க தவறிய கமீலா நாசர் புதுமைப் பெண் என்று தன்னைத் தானே கூறிக் கொள்வது வேடிக்கையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.