ETV Bharat / city

மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

author img

By

Published : Aug 19, 2022, 12:26 PM IST

தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் விளையும் மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

Etv Bharatமாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

சென்னை: சென்னை தனியார் மாலில் தஞ்சாவூர் மாவட்டத்தில் புவிசார் குறியீடுகள் பெற்ற பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சியில் தஞ்சாவூர் ஓவியம் நாச்சியார் கோவில் குத்துவிளக்கு உள்ளிட்ட புவிசார் குறியீடு பெற்ற 10 பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

கண்காட்சியை தொடங்கி வைத்த பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘தஞ்சை மாவட்டத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விற்பனை கூடத்தை இன்று தொடங்கி வைத்துள்ளோம். தமிழ்நாட்டில் 43 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் உள்ளது. அவற்றில் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெறப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் தயாரிக்கும் 24 வகையான பொருட்களுக்கு புதிசார் குறியீடு பெறுவதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்து உள்ளார்.

மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை

புவிசார் குறியீடு வழங்குவதற்கான மண்டல மையம் சென்னையில் இருந்தாலும் நாம் குறைந்த அளவிலேயே புவிசார் குறியீடு பெற்றுள்ளோம். எனவே அதிக அளவில் புவிசார் குறியீடுகளை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. புவிசார் குறியீடுகளை பெற்ற பொருட்களை விற்பனை செய்வதன் மூலம் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அதிகரிக்கும்.

தஞ்சாவூரில் உற்பத்தியாகும் மாப்பிள்ளை சம்பா அரிசிக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் விவரங்கள் குறித்து பள்ளி மாணவர்களுக்கும் கற்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க:திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.