சென்னை பெருங்களத்தூர் அடுத்த காமராஜபுரம் பகுதியில் பழுதடைந்த மின்கம்பத்தை மின் ஊழியர்கள் எந்த ஒரு உரிய பாதுகாப்பு உபகரணங்களுமின்றி மின்கம்பத்தை மாற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக நெடுங்குன்றம் பகுதியை சேர்ந்த சாந்தி(30) அவருடைய மகள் நிவேதா (17) ஆகியோர் இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது மின்கம்பம் இருசக்கர வாகனத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் தாய் மற்றும் மகள் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:கடலூரில் பைக், லாரி மோதி விபத்து: 2 இளைஞர்கள் உயிரிழப்பு!