ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் மன்பிரீத் சிங்(30). இவர் மீது ஹரியானா மாநில காவல்துறையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை கைது செய்ய காவல்துறையினர் தீவிரமாக தேடியா நிலையில் தலைமறைவாானார்.
அதன்பின் அவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதோடு அனைத்து முக்கிய சர்வதேச விமான நிலையங்களிலும் எல்ஓசி போட்டு வைத்திருந்தனர். இந்த நிலையில் மலேசிய நாட்டு தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா பயணிகள் விமானம், சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் சோதித்தனர். அப்போது மன்பிரீத் சிங்கும் வந்திருந்தார். அதன்பின் அவர் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது.
இதனையடுத்து மன்பிரீத் சிங்கை வெளியில் விடாமல், மடக்கிப்பிடித்து குடியுரிமை அலுவலகத்தில் ஒரு அறையில் அடைத்து வைத்தனர். அதோடு ஹரியானா மாநில காவல்துறையினருக்கும் தகவல் கொடுத்தனர். ஹரியானாவிலிருந்து தனிப்படை காவல்துறையினர், சென்னை விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருக்கிறார்கள். அதுவரையில் மன்பிரீத் சிங்கை பாதுகாப்பாக வைப்பதற்காக, சென்னை விமான நிலைய போலீசில் குடியுரிமை அதிகாரிகள் ஒப்படைத்துள்ளனர்.
இதையும் படிங்க: பண மோசடி வழக்கில் தலைமறைவு...சென்னை விமான நிலையத்தில் மும்பை தொழிலதிபர் கைது