சென்னை: கரோனா பாதிப்பு விவரங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று (நவ.18) வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டில் புதிதாக ஒரு லட்சத்து ஆயிரத்து 336 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் புதிதாக 775 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 21 லட்சத்து 24 ஆயிரத்து 888 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 27 லட்சத்து 17 ஆயிரத்து 978 நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டன. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 9 ஆயிரத்து 78 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 896 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 72 ஆயிரத்து 564ஆக உயர்ந்துள்ளது. மேலும் தனியார் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 10 நோயாளிகள் என 12 நோயாளிகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 336ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் புதிதாக 126 நபர்களுக்கும் கோயம்புத்தூரில் 112 நபர்களுக்கும் கரோனா தொற்று அதிகமாக கண்டறியப்பட்டுள்ளன.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை - 5 லட்சத்து 56 ஆயிரத்து 759
- கோயம்புத்தூர் - 2 லட்சத்து 48 ஆயிரத்து 774
- செங்கல்பட்டு - 1 லட்சத்து 73 ஆயிரத்து 76
- திருவள்ளூர் - 1 லட்சத்து 19 ஆயிரத்து 904
- ஈரோடு - 1 லட்சத்து 5 ஆயிரத்து 485
- சேலம் - 1 லட்சத்து 789
- திருப்பூர் - 96 ஆயிரத்து 466
- திருச்சிராப்பள்ளி - 78 ஆயிரத்து 170
- மதுரை - 75 ஆயிரத்து 413
- காஞ்சிபுரம் - 75 ஆயிரத்து 377
- தஞ்சாவூர் - 75 ஆயிரத்து 882
- கடலூர் - 64 ஆயிரத்து 323
- கன்னியாகுமரி - 62 ஆயிரத்து 663
- தூத்துக்குடி - 56 ஆயிரத்து 446
- திருவண்ணாமலை - 55 ஆயிரத்து 126
- நாமக்கல் - 52 ஆயிரத்து 966
- வேலூர் - 50 ஆயிரத்து 55
- திருநெல்வேலி - 49 ஆயிரத்து 557
- விருதுநகர் - 46 ஆயிரத்து 372
- விழுப்புரம் - 45 ஆயிரத்து 965
- தேனி - 43 ஆயிரத்து 595
- ராணிப்பேட்டை - 43 ஆயிரத்து 517
- கிருஷ்ணகிரி - 43 ஆயிரத்து 747
- திருவாரூர் - 41ஆயிரத்து 765
- திண்டுக்கல் - 33 ஆயிரத்து 182
- நீலகிரி - 33 ஆயிரத்து 885
- கள்ளக்குறிச்சி - 31 ஆயிரத்து 523
- புதுக்கோட்டை - 30 ஆயிரத்து 295
- திருப்பத்தூர் - 29 ஆயிரத்து 364
- தென்காசி - 27 ஆயிரத்து 380
- தர்மபுரி - 28 ஆயிரத்து 691
- கரூர் - 24 ஆயிரத்து 418
- மயிலாடுதுறை - 23 ஆயிரத்து 336
- ராமநாதபுரம் - 20 ஆயிரத்து 603
- நாகப்பட்டினம் - 21 ஆயிரத்து 229
- சிவகங்கை - 20 ஆயிரத்து 341
- அரியலூர் - 16 ஆயிரத்து 906
- பெரம்பலூர் - 12 ஆயிரத்து 093
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1031
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1085
- ரயில் மூலம் வந்தவர்கள் - 428
இதையும் படிங்க: புதிய வகை கரோனா அச்சுறுத்தல்... பள்ளிகள் மூடல்...