ETV Bharat / city

தனியார் நிறுவனம் போல் ஆவின் நிர்வாகம் செயல்பட திட்டம் - பால் முகவர்கள் சங்கம்

சென்னை: தனியார் நிறுவனங்களை போல் செயல்பட தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது என ஆவின் நிர்வாகம் மீது பால் முகவர்கள் சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.

Aavin management
Aavin management
author img

By

Published : Jul 10, 2020, 7:55 AM IST

இது தொடர்பாக தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநில தலைவர் பொன்னுசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "ஆவின் நிறுவனம் சார்பில் ஐந்து வகையான புதிய பால் பொருள்களை தமிழ்நாடு முதலமைச்சர் அறிமுகம் செய்துள்ளார். அதில் நான்கு பால் பொருள்கள் (மோர், லஸ்ஸி 2 வகை, 90நாள் கெட்டுப் போகாத பால்) ஏற்கனவே வணிக சந்தையில் உள்ளவையே. ஏற்கனவே பிறந்த குழந்தைக்கு பெயர் சூட்டி அழகு பார்த்து விட்ட பிறகு மீண்டும் புத்தாடை அணிவித்து அக்குழந்தை புதிதாக பிறந்திருப்பதாக கூறுவது போல் அமைந்திருக்கிறது தமிழ்நாடு பால்வளத்துறையின் செயல்பாடுகள்.

மேற்கண்ட பால் பொருள்கள் வணிக சந்தையில் ஏற்கனவே இருப்பது குறித்த உண்மை நிலவரத்தை முதலமைச்சருக்கு பால்வளத்துறையினர் எடுத்துக் கூறினார்களா? இல்லை திட்டமிட்டு மறைத்து விட்டனரா? எனத் தெரியவில்லை. மேலும் முதலமைச்சர் அறிமுகம் செய்துள்ள "ஆவின் டீ மேட் பால்" முற்றிலும் மக்களையும், வணிகர்களையும் ஏமாற்றும் செயலாகும்.

ஏனெனில் தற்போது விற்பனையில் உள்ள ஆவின் கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பால் (கொழுப்பு சத்து 6.0% திடசத்து 9.0%) அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ஒரு லிட்டர் 51 ரூபாய். அதுவே மாதாந்திர அட்டைதாரர்களுக்கு ஒரு லிட்டர் 49 ரூபாய் மட்டுமே. ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஆவின் டீ மேட் பால்" கொழுப்பு சத்து 6.5 விழுக்காடு எனவும் திடசத்து 9.0 விழுக்காடு எனவும் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை ஒரு லிட்டர் 60 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் 0.5 விழுக்காடு கொழுப்பு சத்தை மட்டும் அதிகரித்து விட்டு ஒரு லிட்டருக்கு 9 ரூபாய் முதல் 11 ரூபாய் வரை அதிக விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

அதே சமயம் ஆவின் நிறுவனம் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து ஒரு லிட்டர் பாலை (1TS×2.66)32.00 ரூபாய்க்கு கொள்முதல் செய்கிறது. அப்படியானால் 0.5TSக்கு 1.50 வரை அதிகபட்ச விலையை நிர்ணயம் செய்யலாம். ஆனால் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள "ஆவின் டீ மேட் பாலில்" ஏற்கனவே விற்பனையில் உள்ள கொழுப்பு சத்து செரிவூட்டப்பட்ட பாலை விட 0.5 விழுக்காடு மட்டும் (0.5TS-1.33) கூடுதலாக்கி விற்பனை விலையில் ஒரு லிட்டருக்கு 11 ரூபாய் வரை அதிகரித்திருப்பதை பார்க்கும் போது தனியார் பால் நிறுவனங்களுக்கு இணையாக பால் விற்பனை விலையை கொண்டு வர திட்டமிட்டுள்ளனரோ என்கிற சந்தேகம் எழுகிறது". இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.