சென்னை: பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம், கோவிந்தராஜ் நகரை சேர்ந்தவர் வினோத்(34). அவரது வீட்டின் உள்ள புதரில் கஞ்சா செடி வளர்ப்பதாக வந்த தகவலையடுத்து பூந்தமல்லி போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது கஞ்சா செடி வளர்த்து வந்தது உறுதியானது.
இதையடுத்து முட்புதரில் வளர்ந்து இருந்த கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார், வினோத்தை கைது செய்தனர். விசாரணையில் போதைக்காக கஞ்சா செடியை வீட்டிலேயே வளர்த்து வந்தது தெரியவந்தது. இவர் ஏற்கனவே, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் வேறு எங்கெல்லாம் கஞ்சா செடியை வளர்க்கிறார் என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இன்ஸ்டாகிராமில் கஞ்சா ஆர்டர் செய்து விற்பனை - பொறியியல் பட்டதாரி மூவர் கைது