ETV Bharat / city

வேப்பேரியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது! - செயின் பறிப்பில் ஈடுபட்ட இளைஞர் கைது

சென்னை: வேப்பேரியில் தொடர்ந்து செயின், செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

A Youth Arrested For Continues Chain Snatching In Vepperi

author img

By

Published : Aug 5, 2020, 12:15 PM IST

சென்னை வேப்பேரி ரித்தர்டன் சாலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு லட்சுமணன் ( 53) என்பவர் நடந்து செல்லும் போது திடீரென்று இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு கொள்ளையர்கள் அவரிடமிருந்த செல்போனை பறித்து விட்டு தப்பிச் செல்ல முயன்றுள்ளனர்.

அப்போது லட்சுமணன் அவர்களை பிடிக்க முயன்ற போது பின்புறம் அமர்ந்திருந்த கொள்ளையர் ஒருவர் அவரை கத்தியால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

அதில், பலத்த காயமடைந்த லட்சுமணன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

முன்னதாக அதே இடத்தில், கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு லட்சுமி (17) என்ற பெண் தந்தையோடு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் இரண்டு சவரன் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றதாகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வேப்பேரி சட்டம் ஒமுங்கு ஆய்வாளர் நாகராஜன் தலைமையிலான காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்த இரண்டு சம்பவங்களுமே மாலையில் நடைபெற்றது என்பதால் ஒரே கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் எனச் சந்தேகித்த காவல்துறையினர் அந்த இடங்களில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில், தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வியாசர்பாடி கல்யாணபுரத்தைச் சேர்ந்த தினேஷ் (24) என்பது தெரியவந்து.

இதையடுத்து, தினேஷை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இவருடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட மற்றொரு குற்றவாளி யுவராஜ் தலைமறைவாக இருப்பதால் அவரைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.