ETV Bharat / city

மனைவியை ஆபாசமாக பேசி, கத்தியை காட்டி மிரட்டியவரை கொலை செய்த இளைஞர்! - இளைஞர் கைது

சென்னையில் மனைவியை ஆபாசமாக பேசி, கத்தியை காட்டி மிரட்டியவரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

man
man
author img

By

Published : Jul 12, 2022, 6:37 PM IST

சென்னை: பல்லாவரம் அடுத்த பொழிச்சலூரை சேர்ந்த பாண்டியன்(45), என்பவர் நாகல்கேணி மீன் மார்கெட்டில் மீன் வெட்டும் வேலை செய்து வருகிறார். இவருக்கும், அதே இடத்தில் மீன் வெட்டும் வேலை செய்யும் சிரஞ்சீவி(24) என்பவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில் நேற்று(ஜூலை 11) சிரஞ்சீவியின் வீட்டிற்குச் சென்ற பாண்டியன், அவரது மனைவி பவானியை ஆபாசமாக திட்டி, கத்தியை காட்டி மிரட்டிவிட்டு வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி தனது நண்பர் ஹரி என்பவரோடு, குடிபோதையில் பொழிச்சலூர் சென்று, வீதியில் வைத்து பாண்டியனை கத்தியால் குத்தியுள்ளார்.

பிறகு தப்பிச்செல்ல முயன்ற சிரஞ்சீவியை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் பாண்டியனை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று முதலுதவி சிகிச்சை அளித்து, பிறகு மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் சிகிச்சை பலனின்றி பாண்டியன் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சிரஞ்சீவி மற்றும் ஹரி இருவரையும் கைது செய்தனர். மனைவியை கத்தியை காட்டி மிரட்டி, ஆபாசமாக பேசியதால் கொலை செய்ததாக சிரஞ்சீவி வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையும் படிங்க:விவாகரத்தான இளம்பெண்; ஆண் நண்பர்களுடன் தனிமையில் இருக்க வற்புறுத்திய பல்மருத்துவர் உள்ளிட்ட 3 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.