சென்னை: சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் வ.உ.சி., நகரைச் சேர்ந்தவர் சிவசண்முகம் (51) தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கடந்த மாதம் 16ஆம் தேதி சுற்றுலா செல்வதற்காக கொல்கத்தா சென்று உள்ளார்.
பின்னர் கடந்த மாதம் 23ஆம் தேதி வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 34 சவரன் தங்க நகைகள், ஒரு லட்ச ரூபாய் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
பின்னர் சிவசண்முகம் இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் காட்சிகளை கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பம்மல் ஈஸ்வரன் நகர் பகுதியைச் சார்ந்த ஞான மூர்த்தி என்கிற மூர்த்தி (40) என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பம்மல் பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் அளவீட்டை குறிவைத்து தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
அவரிடம் இருந்து சுமார் 86 சவரன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் தங்க நகைகள் யார் வீட்டில் இருந்து கொள்ளை அடிக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:ஆந்திராவிற்கு கடத்த முயன்ற 18 கிலோ வெள்ளி நகைகள் பறிமுதல்