சென்னை தாம்பரம் அடுத்த ரங்கநாதபுரம் 2ஆவது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (40), ரேவதி (37) தம்பதி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராஜேந்திரன் ரங்கநாதபுரம் தொகுதி திமுக வட்டச் செயலாளராக இருந்துவந்தார்.
ராஜேந்திரன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். இதனால் அவருக்கும் அவரது மணைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்றிரவு (ஜன. 27) தனது மனைவியுடன் தகராறில் ராஜேந்திரன் ஈடுபட்டுள்ளார். இதனால் அவரது மனைவி ரேவதி கோபித்துக்கொண்டு அவரது மகன் மகள்களுடன் அவரது அம்மா வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனால் ராஜேந்திரன் அதிகளவு மது அருந்திவிட்டு வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்நிலையில் இன்று (ஜன. 28) காலை ராஜேந்திரன் வீட்டிற்கு கேஸ் போட வந்த நபர் ராஜேந்திரன் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இது குறித்து இறந்தவரின் உறவினர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர் தகவலறிந்து வந்த தாம்பரம் காவல் துறையினர் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: கைவிரலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி உயிரிழப்பு: மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமா?