ETV Bharat / city

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி கைது

வீடு ஒதுக்கி தராததால் கோபத்தில் முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

author img

By

Published : Feb 6, 2022, 7:45 AM IST

சென்னை: முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கடந்த 4ஆம் தேதியன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

இதனையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீடு மற்றும் சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் வீடு ஆகிய இடங்களில் சோதனை செய்தனர்.

சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி எனத் தெரியவந்தது. இதனையடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை செய்தபோது செங்கல்பட்டு மாவட்டம் வடபுறந்தவாக்கத்தை சேர்ந்த ஐயப்பன் எனத் தெரியவந்தது.

தேனாம்பேட்டை காவல் துறையினர் ஐயப்பனை கைது செய்து விசாரணை செய்தனர். விசாரணையில் மாற்றுத்திறனாளியான ஐயப்பனுக்கு அரசு சார்பில் வீடு இலவசமாக கொடுக்க வேண்டுமென பலமுறை முதலமைச்சரிடம் மனு அளித்து வந்ததாகவும், ஆனால் வீடு ஒதுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இதனால் ஆதங்கத்தில் முதலமைச்சர் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியதாக விசாரணையில் தெரிவித்துள்ளார்.

ஐயப்பன் ஏற்கனவே கடந்த 2020ஆம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்து கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தேர்தலில் வாய்ப்பு இல்லையென்றால், அரசுப் பொறுப்பு- அமைச்சர் செந்தில்பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.