ETV Bharat / city

ஆந்திராவைச் சேர்ந்த தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது - சென்னை செய்திகள்

வெளிநாட்டில் மூன்று ஆண்டுகளாகத் தலைமறைவாக இருந்த ஆந்திராவைச் சேர்ந்த தேடப்பட்ட தலைமறைவு குற்றவாளி, துபாயிலிருந்து வந்தபோது சென்னை விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டார்.

தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது
தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது
author img

By

Published : Oct 4, 2021, 10:22 AM IST

சென்னை: துபாயிலிருந்து எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் சிறப்பு விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் (கடவுச்சீட்டு), ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அலுவலர்கள் சோதனையிட்டனர்.

அப்போது ஆந்திர மாநிலம் சித்தூரைச் சோ்ந்த கோபிநாத் (39) என்பவர் அந்த விமானத்தில் வந்தார். அவருடைய கடவுச்சீட்டை குடியுரிமை அலுவலர்கள் கணினியில் ஆய்வுசெய்தனர். அதில் அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரால் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தேடப்பட்டுவரும் தலைமறைவு குற்றவாளி என்று தெரியவந்தது.

அனைத்து விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி.

இதையடுத்து குடியுரிமை அலுவலர்கள் கோபிநாத்தை வெளியே விடாமல் அங்கு ஒரு அறையில் அடைத்துவைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் துபாயில் வேலை செய்துவிட்டு சொந்த ஊா் திரும்பிவருவதாகவும், தன் மீது புகார் எதுவும் இல்லை என்றும் கூறினார்.

தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது
தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது

ஆனாலும் குடியுரிமை அலுவலர்கள் தொடா்ந்து விசாரித்தபோது, கோபிநாத் மீது வரதட்சணை கொடுமை வழக்கு 2018ஆம் ஆண்டில் நெல்லூர் காவல் நிலையத்தில் பதிவாகியுள்ளது. காவலர்கள் கைதுசெய்ய தேடியபோது, வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்று தலைமறைவாகிவிட்டார்.

இதையடுத்து நெல்லூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கோபிநாத்தைத் தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து, அனைத்துப் பன்னாட்டு விமான நிலையங்களிலும் எல்.ஓ.சி. (LOC) போட்டுவைத்திருப்பது தெரியவந்தது.

தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது
தலைமறைவு குற்றவாளி சென்னையில் கைது

இதையடுத்து குடியுரிமை அலுவலர்கள், மூன்று ஆண்டுகள் தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் சிக்கிய தகவலை நெல்லூா் காவல் கண்காணிப்பாளருக்குத் தெரிவித்தனர். நெல்லூரிலிருந்து தனிப்படையினர் சென்னை விமான நிலையம் வந்து கோபிநாத்தைக் கைதுசெய்து ஆந்திராவிற்கு அழைத்துச் சென்றனர்.

இதையும் படிங்க: உ.பி. வன்முறையில் 8 பேர் மரணம்: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.