சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஜோதி பாஸ்கர் (28). இவருக்கு திருமணமாகி தற்போது காசிமேடு பகுதியில் மனைவியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், குரோம்பேட்டை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஜோதி பாஸ்கர் அவரது தந்தையிடம் தகராறு செய்து கொண்டு இருந்துள்ளார்.
இதைக் கண்ட காவல் துறையினர் இதுகுறித்து கேட்டபோது, திடிரென ஜோதி பாஸ்கர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து காவலர்களை மிரட்டியுள்ளார். காவலர்கள் ஜோதி பாஸ்கரை மடைக்கிப்பிடித்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அதில், அவர் குரோம்பேட்டை அதன் சுற்றியுள்ள பகுதியில் பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர் என்பதும், அவர் மீது அடிதடி வழக்குகள் இருப்பதும், பிரபல ரவுடி கும்பலில் இருந்து வெளிவந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.