தமிழ்நாடு முழுவதும் 15 நாள்கள் கே.எஸ்.அழகிரி பரப்புரை
இன்று(மார்ச் 20) முதல் அடுத்த 15 நாள்களுக்கு மாநிலம் முழுவதும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி சட்டப்பேரவைத் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார்.
திருமங்கலத்தில் ஸ்டாலின் பரப்புரை
மதுரை புறநகரைச் சேர்ந்த திமுக கூட்டணி வேட்பாளர்கள் ஆறு பேரை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (மார்ச் 20) திருமங்கலத்தில் பரப்புரை மேற்கொள்கிறார்.
மேற்கு வங்கம், அசாமில் பிரதமர் பரப்புரை
மேற்கு வங்கம், அசாமில் இன்று முதல் இரண்டு நாள்களுக்கு பிரதமர் மோடி தேர்தல் பரப்புரையில் ஈடுபடவுள்ளார். மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 29ஆம் தேதி வரை எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. அசாம் சட்டப்பேரவை தேர்தலில் மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடக்கிறது.
இந்தியா - இங்கிலாந்து டி20 போட்டி; தொடரை வெல்லுமா இந்தியா?
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் கடைசி டி 20 ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்று (மார்ச் 20) இரவு நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணியே, தொடரை வெல்லும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.