ETV Bharat / city

சென்னை மாமன்ற கூட்டம் வரும் 9ஆம் தேதி கூடுகிறது

சென்னை மாநகராட்சியின் 2022- 2023 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை சமர்பிப்பதற்கான மாமன்ற கூட்டம் வரும் 9ஆம் தேதி கூடுகிறது.

மாமன்ற கூட்டம் வரும் 9ஆம் தேதி கூடுகிறது

author img

By

Published : Apr 5, 2022, 11:56 AM IST

சென்னை: 2016-க்கு பிறகு மேயர் தேர்தல் நடைபெறாமல் இருந்ததால் கடந்த ஆறு ஆண்டுகளாக ஆணையர் மற்றும் துணை ஆணையர்கள் மாநகராட்சி வரவு செலவு திட்டத்தை கவனித்துக்கொண்டிருந்தனர்.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு திமுகவை சார்ந்த பிரியா மேயராக பதவி ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் இந்த ஆண்டு வரவு செலவு திட்ட கணக்கையும், கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கையும், மேயர் மாமன்ற உறுப்பினர் முன்னிலையில் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் கூட்டம் வரும் ஏப்ரல் 09 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு மாநகராட்சி மாமன்ற கூடத்தில் நடைபெற உள்ளது.

இதில் பெருநகர சென்னை மாநகராட்சியின் 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டம் மாநகராட்சி மேயரால் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தொடர்ந்து அன்றைய தினமே வரவு-செலவு திட்டத்தின் மீது மன்றத்தில் விவாதம் நடைபெறும் எனவும், கூட்ட இறுதியில் 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவு திட்டத்திற்கான ஒப்புதல் அளிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமன்ற உறுப்பினர் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லிட்டருக்கு 80 கி.மீ.. செம்ம புல்லட்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.