ETV Bharat / city

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

TOP 10 NEWS @ 9 PM
TOP 10 NEWS @ 9 PM
author img

By

Published : Sep 29, 2021, 9:37 PM IST

1.18 பெண்கள்.. பாலியல் வன்புணர்வு கொலை.. சைக்கோ உமேஷ் ரெட்டி தூக்கு உறுதி!

பாலியல் சைக்கோ கொலை குற்றவாளி உமேஷ் ரெட்டி மரண தண்டனையை கர்நாடக உயர்நீதிமன்றம் புதன்கிழமை (செப்.29) உறுதி செய்தது.

2.டெல்லியில் அமித் ஷா, அமரீந்தர் சிங் சந்திப்பு!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து கேப்டன் அமரீந்தர் சிங் பேசினார்.

3.உறுதி.. நிபா வைரஸின் ஆதாரம் வௌவால்கள்.. கேரள சுகாதார அமைச்சர்!

நிபா வைரஸின் ஆதாரமாக வௌவால்கள் விளங்கலாம் என கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

4.புகையில்லா தீபாவளி: ஜனவரி 1 வரை பட்டாசு வெடிக்கத் தடை!

டெல்லியில் பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது தகுந்த இடைவெளியைத் தவிர்க்கும் என்பது ஒருபுறம் இருந்தாலும், காற்று மாசுவினால் ஏற்படும் பாதிப்பு பல மடங்காக இருக்கும் என ஆய்வாளர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர். இதன் காரணாக ஜனவரி 1ஆம் தேதிவரை பட்டாசுகள் வெடிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

5.'தனிப்பட்ட பகை இல்லை, சேவை செய்ய விரும்புகிறேன்'- நவ்ஜோத் சிங் சித்து!

தனக்கு யாருடனும் தனிப்பட்ட பகை இல்லை, பொதுமக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என நவ்ஜோத் சிங் சித்து கூறினார்.

6.பள்ளிகள் திறப்பு: ஆளுநர் சொல்வது என்ன?

1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு சம்பந்தமாக துணைநிலை ஆளுநர் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

7.அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதற்கு எதிரான மனு தள்ளுபடி

அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 60 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணைக்குத் தடைவிதிக்கக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

8.ஜெயலலிதா போல் செயல்படும் மு.க. ஸ்டாலின்! - புகழாரம் சூட்டும் செல்லூர் ராஜு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தனது ஆட்சிக்காலத்தில் ரவுடிகளை முழுவதுமாக ஒடுக்கி வைத்திருந்தார், அதேபோன்று தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துவருவது வரவேற்கத்தக்கது என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

9.சட்டக் கல்லூரி மாணவர்களுக்கு நாளை வகுப்புகள் தொடக்கம்

சட்டக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்புகள் நாளைமுதல் தொடங்கப்படும் எனத் தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

10.'ரூ.1000 கோடி மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்பு'

ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் ஆக்கிரமிப்பு இடங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.