ETV Bharat / city

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

author img

By

Published : Oct 9, 2021, 9:28 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்தி சுருக்கம்.

9 PM
9 PM

1. 3,000 கிலோ ஹெராயின்: சென்னையில் 10 மணிநேரமாக தொடரும் என்ஐஏ ரெய்டு

குஜராத்தில் ரூ.21ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின் போதை பொருள் பறிமுதல் செய்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சென்னை தம்பதியினரின் வீட்டில் டெல்லி என்ஐஏ தொடர்ந்து பத்து மணிநேரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

2.சிறுமி கூட்டுப் பாலியல் வன்புணர்வு - தேடுதல் வேட்டையில் போலீஸ்

கர்நாடகா மாநிலத்தில் சிறுமி கொடூரமான முறையில் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

3.தேவாலயம் சென்ற மருத்துவரின் சாதிச் சான்றிதழ் ரத்து செய்யப்பட்ட விவகாரம்: மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் கண்டனம்
தேவாலயம் செல்வதற்காக மருத்துவரின் சாதிச் சான்றிதழை ரத்து செய்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

4.இந்திய விண்வெளி சங்கத்தை தொடங்கி வைக்கும் மோடி

இந்திய விண்வெளித் துறையின் கூட்டுக்குரலாக விளங்க உள்ள ஐஎஸ்பிஏ எனப்படும் இந்திய விண்வெளி சங்கத்தை, நாளை மறுநாள் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார்.

5.குழந்தைகளை காப்பாற்ற முதலமைச்சர் தனிப்பிரிவில் கோரிக்கை

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை இறந்த நிலையில், மற்ற இரண்டு குழந்தைகளைக் காப்பாற்ற உதவுமாறு பெண் ஒருவர் முதலமைச்சருக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

6.திமுகவினரின் வன்முறை கலாச்சாரம் மாறவில்லை - அண்ணாமலை

ஆட்சி மாறினாலும், காட்சி மாறினாலும் திமுகவினரின் வன்முறை கலாச்சாரம் மட்டும் மாறவில்லை என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

7.ஆரியன் கான் விவகாரம்: மூவர் விடுதலை குறித்து கேள்வியெழுப்பிய நவாப் மாலிக்

சொகுசுக் கப்பலில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் பிடிப்பட்ட பாஜகவோடு தொடர்புடையவர் உள்பட மூவரை விடுதலை செய்தது ஏன் என மகாராஷ்டிரா அமைச்சர் நவாப் மாலிக் கேள்வியெழுப்பி உள்ளார்.

8.முதலமைச்சர் கான்வாய் வாகனங்கள் குறைப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாதுகாப்பிற்காக செல்லும் கன்வாய் வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளன.

9.மு.க.ஸ்டாலின் மீது ஆர்.பி.உதயகுமார் நம்பிக்கை - அமைச்சர் பெரியகருப்பன்

மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்தே அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாகும்வரை உண்ணாவிரதம் அறிவித்துள்தாக அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

10.யூனியன் வங்கியை கண்டித்த சு. வெங்கடேசன் எம்பி!

நவராத்திரிக்கு ஒன்பது நிற உடையில் வரவேண்டும்; இல்லாவிட்டால் அபராதம் கட்ட வேண்டும் என ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ள யூனியன் வங்கி நிர்வாகத்திற்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.