1.புதுச்சேரியில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல்!
புதுச்சேரியில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்துவதற்கான, மறு கால அட்டவணையைத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 2,7 மற்றும் 13ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
2.தமிழ்நாட்டில் புதிதாக 1359 பேருக்கு கரோனா தொற்று உறுதி
தமிழ்நாட்டில் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், இன்று புதிதாக ஆயிரத்து 359 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
3.வரலாறு திரும்பியது.. மீண்டும் டாடா கையில் ஏர் இந்தியா!
1950களில் டாடா குழுமம் ஒன்றிய அரசுக்கு தனது பெரும்பான்மை பங்குகளை விற்ற பின்பு ஏர் இந்தியா பொதுத்துறை நிறுவனமானது. ஒன்றிய அரசின் வசம் உள்ள 100 சதவீத பங்குகளையும் வாங்க டாட்டா குழுமமும் ஏலம் கோரியிருந்தது.
4.ஆர்யன் கானுக்கு பிணை மறுப்பு
போதைப்பொருள் வழக்கில் பிரபல நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானுக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது.
5.முக்கிய ரயில்களின் சேவை பிப்ரவரி மாதம் வரை நீட்டிப்பு - தெற்கு ரயில்வே அறிவிப்பு
மதுரை, திண்டுக்கல் வழியாக வட மாநிலங்களுக்குச் செல்லும் சில முக்கிய ரயில்களின் சேவையை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை, நீட்டித்து தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
6.'ஒளிப்பதிவு சட்டதிருத்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை' - ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்
ஒளிப்பதிவு சட்டத் திருத்த மசோதா இன்னும் நிறைவேற்றப்படவில்லை என்றும், கருத்துக் கேட்பு, ஆலோசனை நிலையிலேயே உள்ளதாகவும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
7.மெட்ரோ ரயில் பணிகள்- போக்குவரத்து மாற்றம்
சென்னை மாதவரம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற உள்ள நிலையில், போக்குவரத்து மாற்றங்கள் தொடர்பான அறிவிப்பை சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ளது.
8.கூடங்குளத்தில் மீண்டும் முடங்கியது மின் உற்பத்தி!
கூடங்குளம் முதலாவது அணுஉலையில் பராமரிப்புப் பணிகள் முடிந்து, மீண்டும் மின் உற்பத்தி தொடங்கிய சுமார் 40 நாட்களிலேயே மீண்டும் மின் உற்பத்தி முடங்கியது.
9.68 ஆண்டுகள் கழித்து டாடா வசமானது ஏர் இந்தியா
ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் ஏலத்தில் எடுத்துள்ளதாக அதிகாரப் பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது.
10.COA பாடத்திட்டத்தை இணையத்தில் வெளியிடக்கோரிய மனு - முடிவு எடுக்க தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையருக்கு உத்தரவு
மாணவர்கள் நலன் கருதி, கம்பியூட்டர் ஆபிஸ் ஆட்டோமேஷன் (COA) தேர்விற்குரிய பாடத் திட்டத்தை இணையதளத்தில் வெளியிடக்கோரிய மனு மீதான விசாரணையில், தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்கக ஆணையர், இரண்டு வாரத்தில் பரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்க உத்தரவிட்டு, வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்துள்ளது.