ETV Bharat / city

சுமார் ஒன்பது லட்சம் கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகை - சுகதாரத்துறை அலுவலர்கள்

தமிழ்நாட்டுக்கு மேலும் ஒன்பது லட்சத்து ஒன்பதாயிரத்து 470 கோவீஷீல்டு தடுப்பூசிகள் வந்தடைந்துள்ள நிலையில், தடுப்பூசி பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என மாநில சுகாதாரத் துறை அலுவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவீஷீல்ட் தடுப்பூசி வருகை
கோவீஷீல்ட் தடுப்பூசி
author img

By

Published : Aug 30, 2021, 2:18 PM IST

சென்னை: புனேவிலிருந்து ஒன்பது லட்சத்து ஒன்பதாயிரத்து 470 கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன. தமிழ்நாட்டில் கரோனா இரண்டாம் அலை தற்போது படிப்படியாக குறைந்துவருகிறது. நாள்தோறும் பாதிப்பின் எண்ணிக்கை ஆயிரத்து 500-க்கும் கீழ் குறைந்திருப்பதுடன், இறப்பின் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்துள்ளது.

கரோனாவை தடுப்பூசியால் மட்டுமே முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவர முடியும் என்பதால், மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்திவருகிறது.

மேலும் 9 லட்சம் ஊசி வருகை

அதன் அடிப்படையில், தேவைக்கு ஏற்றவாறு தடுப்பூசிகளை மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வழங்கிவருகிறது. இதையடுத்து மக்களும் கரோனா தடுப்பூசியை ஆர்வமுடன் செலுத்திக்கொள்கின்றனர்.

புனேவிலிருந்து விமானம் மூலம் 77 பார்சல்களில் ஒன்பது லட்சத்து ஒன்பதாயிரத்து 470 கோவீஷீல்டு தடுப்பூசிகள் சென்னைக்கு இன்று (ஆகஸ்ட் 30) வந்தடைந்துள்ளன. இதனை மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் பெற்றுக்கொண்டு, குளிர்சாதன வாகனம் மூலம், சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி சேமிப்பு கிடங்குக்கு கொண்டு சென்றனர்.

தற்போது வந்திருக்கும் இந்தத் தடுப்பூசிகளை பற்றாக்குறை உள்ள மாவட்டங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இந்தியாவில் மேலும் 42,909 பேருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.