சென்னை: தூய்மை பாரதம் திட்டத்தின் கீழ் ரயில் நிலையங்களில் தூய்மையைக் கடைபிடிக்கும் விதமாக, சென்னை கோட்டத்தில் கடந்த செப். 16 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை ‘ஸ்வச்த்தா பக்வடா‘ விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
அதன் இறுதி நிகழ்ச்சி காந்தி ஜெயந்தியான இன்று(அக்.2) நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள புறநகர் ரயில் நிலைய கட்டடத்தில், 80 அடி உயரத்தில் வரையப்பட்ட மகாத்மா காந்தியின் ஓவியம் திறக்கப்பட்டது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தை அழகுபடுத்தும் விதமாகவும், தூய்மையின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும், இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காந்தியடிகளின் ரயில் பயணத்தை நினைவுக்கூறும் வகையில், அவர் ரயிலிலிருந்து இறங்குவது போல வரையப்பட்டுள்ள இந்த ஓவியம், ரயில்வேயில் பணிபுரிந்து ஓய்வுப்பெற்ற ஓவியர் எம்.ஏ.சங்கரலிங்கம் என்பவரது ஓவியத்தில் அடிப்படையில் வரையப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: காந்தி காணவிரும்பிய சமத்துவ சமூகத்தை அமைக்கப் போராடுவோம் -மு.க ஸ்டாலின்...!