ETV Bharat / city

தண்ணீரில் மூழ்கி 8 மாத பெண் குழந்தை பலி - Died in drowned water

சென்னையில் வீட்டின் அறையில் விளையாடிக் கொண்டிருந்த 8 மாத பெண் குழந்தை தண்ணீர் பக்கெட்டில் தவறி விழுந்து பலியாகிய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Aug 12, 2022, 10:54 AM IST

சென்னை கே.கே நகரில் வசித்து வருபவர் அன்சாரி மற்றும் ஜெஸ்ஸிமா தம்பதி. இவர்களின் சனா ஜாஸ்மின் என்ற 8 மாத பெண் குழந்தை நேற்று மாலை 6.30 மணியளவில் வீட்டின் அறையில் விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தையின் தாயார் ஜெஸ்ஸிமா சமையலறை வேலையை முடித்து விட்டு அறையில் பார்த்த போது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனே, வீடு முழுவதும் ஜெஸ்ஸிமா தேடிய போது கழிவறையில் தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் தலைக்குப்புற விழுந்து குழந்தை மூச்சு பேச்சில்லாமல் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் குழந்தையை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கே.கே நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தையின் மரணத்தில் சந்தேகம் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்ததால் பெற்றோரிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது.

இதையும் படிங்க: 83-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.