ETV Bharat / city

காத்திருப்போர் பட்டியலில் இருந்த 8 டி.எஸ்.பி.க்களுக்குப் பணி

author img

By

Published : May 19, 2021, 6:21 PM IST

தமிழ்நாட்டில் காத்திருப்போர் பட்டியலில் இருந்து வந்த காவல் துறை துணைக் கண்காணிப்பாளர்களை(டி.எஸ்.பி), மாநிலத்திலுள்ள பல்வேறு துறைகளில் பணியமர்த்தி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

டிஜிபி திரிபாதி
டிஜிபி திரிபாதி

சென்னை: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. புதிய அரசு ஆட்சியமைக்கத் தொடங்கியது முதல் பல்வேறு துறைகளில் இருந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், தேர்தல் நேரத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட 8 டி.எஸ்.பிக்களை, காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு, புதிய பொறுப்புகள் வழங்கி, தமிழ்நாடு டிஜிபி திரிபாதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதனடிப்படையில் டி.எஸ்.பி ராதாகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட பொருளாதாரக் குற்ற தடுப்புப் பிரிவு II-ன் டி.எஸ்.பி-யாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

டி.எஸ்.பி அன்பரசன், சென்னை எழும்பூர் ரயில்வே டி.எஸ்.பியாக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

டி.எஸ்.பி வேல்முருகன், சென்னை கடலோர பாதுகாப்பு குழுமத்தின் டி.எஸ்.பி-யாகவும், டி.எஸ்.பி கோவிந்தராஜூ, சென்னை பெருநகரின் சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவின் டி.எஸ்.பி-யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

அதேபோல, டி.எஸ்.பி வல்லவன், பெரம்பலூர் மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவு டி.எஸ்.பி-யாகவும், டி.எஸ்.பி திருநாவுக்கரசு, காஞ்சிபுரம் சரக காவலர் பயிற்சி மைய டி.எஸ்.பி-யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

டி.எஸ்.பி சுபாஷ் ராமநாதபுரம், சரக காவலர் பயிற்சி மைய டி.எஸ்.பி-யாகவும், டி.எஸ்.பி கோபாலச் சந்திரன், தஞ்சாவூர் சரக காவலர் பயிற்சி மைய டி.எஸ்.பி-யாகவும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: சேலம் மாவட்டத்தின் 173ஆவது ஆட்சியராக கார்மேகம் பதவியேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.