சென்னையில், மொத்தம் 281 பள்ளிகள் மாநகராட்சி கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தற்போது, தனியார் பள்ளிகளிலிருந்து வெளியேறி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது, 2021-22 கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கை கடந்த 14ஆம் தேதி தொடங்கியது. இதில், கிட்டத்தட்ட 10 நாட்களுக்குள் 7,991 பேர் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், இன்று(ஜூன். 23) 8,000 கடந்துவிடும். இன்னும், இரண்டு மாதங்களுக்கு மேல் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
மொத்தம் 281 மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்து ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புவரை நேற்று (ஜூன்.23) நிலவரப்படி 84,493 மாணவர்கள் உள்ளனர்.
முன்னதாக, 2020-21 கல்வியாண்டில் மாநகராட்சி பள்ளிகளில் புதிதாக சேர்ந்த மொத்த மாணவர்கள் 27,843. இதில், தனியார், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் இருந்து வெளியேறிய சுமார் 14,763 மாணவர்கள் மாநகராட்சி பள்ளிகளில் சேர்ந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’கோவாக்சின்’ தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி: ஆர்வம் காட்டும் WHO