பிரதமர் நரேந்திர மோடியின் 70ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (செப்.17) சென்னை மதுரவாயல் பகுதியில் பாஜக சார்பாக 70 அடி பாஜக கொடிக்கம்பம், கல்வெட்டு அமைக்கப்பட்டது. அதனை தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன் திறந்துவைத்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், கொடிக்கம்பம் உரிய அனுமதியின்றி வைக்கப்பட்டதாகவும், மிக உயரமாக இருப்பதாகவும் கூறி இரவோடு இரவாக ஜேசிபி வைத்து இடித்து அகற்றினர். இது பாஜகவினர் மத்தியில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும், அந்தப் பகுதியில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமலிருக்க மதுரவாயல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: தேர்வு முடிவுகள் வந்ததும் நீட் குறித்த சூர்யாவின் நிலைப்பாடு மாறும்: அண்ணாமலை