ETV Bharat / city

தாம்பரம் மாநகராட்சியில் 70 மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு - தாம்பரம் மாநகராட்சி மாமன்றம்

தாம்பரம் மாநகராட்சியில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற 70 உறுப்பினர்களுக்கும் இன்று (மார்ச் 2) தாம்பரம் மாநகராட்சி அலுவலகத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

பதவி ஏற்பு விழா
பதவி ஏற்பு விழா
author img

By

Published : Mar 2, 2022, 10:52 PM IST

சென்னை: நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித்தேர்தலில் தாம்பரம் மாநகராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு தாம்பரம் மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தாம்பரம் மாநகராட்சி மாமன்றத்தில் வெற்றி பெற்ற உறுப்பினர்களான திமுக - 48, அதிமுக - 8, சுயேச்சை - 7, காங்கிரஸ் - 2, மதிமுக - 1, மமக - 1, தமிழ் மாநில காங்கிரஸ் - 1, சிபிஎம் - 1, விசிக - 1 ஆகியோர் என 70 பேர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

பதவி ஏற்றுக்கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் அவரவர் கட்சித் தலைவர்களின் பெயர்களைக் கூறி பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு சிறு குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.ஆர்.ராஜா, இ.கருணாநிதி, அப்துல் சமது, மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சென்னைக்கு இணையான தாம்பரம்

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறுகையில், 'திமுக தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்கின் அடிப்படையில் தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்பட்டது. பரங்கிமலை ஊராட்சியை விரைவில் தாம்பரம் மாநகராட்சியில் இணைத்து சென்னைக்கு அடுத்தபடியான மாநகராட்சியாக உருவாக்குவோம்.

மாமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு விழா

சென்னை மாநகராட்சி போல அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்தி, சென்னை மாநகராட்சிக்கு இணையாகத் தாம்பரம் மாநகராட்சியை உருவாக்குவோம். பதவி ஏற்றுக்கொண்ட மாமன்ற உறுப்பினர்கள் கடமையைச் சரியாகச் செய்யவேண்டும்' எனக் கூறினார்.

பின்னர் பதவியேற்றுக் கொண்ட 70 மாமன்ற உறுப்பினர்களும் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாநகராட்சி ஆணையர் இளங்கோவன், மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் ஆகியோருடன் ஒன்றாக அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

இதையும் படிங்க: நிலையூர் கண்மாயில் சட்டவிரோத தண்ணீர் திறப்பு குறித்து ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.