ETV Bharat / city

மாலை 7 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @ 7 AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச்சுருக்கம்...

மாலை 7 மணி செய்திச்சுருக்கம்
மாலை 7 மணி செய்திச்சுருக்கம்
author img

By

Published : Aug 6, 2021, 7:24 PM IST

1.டோக்கியோ ஒலிம்பிக் - சாதி வெறியர்களின் கொண்டாட்டம் அநாகரிகம்- தொல். திருமாவளவன்!

டோக்கியோ ஒலிம்பிக் ஹாக்கி போட்டியில் மகளிர் அணியின் தோல்விக்கு சாதிதான் காரணம் என குற்றஞ்சாட்டிய சாதிய வெறியர்களுக்கு தொல். திருமாவளவன் எம்.பி. கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், “நாங்கள் எங்கள் திறமையான வீரர்களுக்கு பக்கபலமாக நிற்கிறோம்” என்றும் கூறியுள்ளார்.

2.கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் விண்ணப்பம்!

இந்தியாவில் கோவிட் தடுப்பூசிக்கு அனுமதி கோரி ஜான்சன் அண்ட் ஜான்சன் விண்ணப்பித்துள்ளது.

3.கர்நாடகாவில் புதிய வைரஸ் பாதிப்பு!

அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஒருவருக்கு புதிய வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

4.தோனியின் ப்ளூ டிக் நீக்கம்; சில மணிநேரத்தில் சேர்ப்பு... நடந்தது என்ன?

இந்திய அணியின் முன்னாள் கேப்டனான தோனியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து 'ப்ளூ டிக்' எனப்படும் அதிகாரப்பூர்வ முத்திரையை ட்விட்டர் நிறுவனம் திரும்பப் பெற்று சில மணி நேரத்தில் சேர்த்துள்ளது.

5.நீட் தேர்வு: சொற்ப எண்ணிக்கையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ள அவலம்!

நீட் தேர்வு எழுதுவதற்கு சொற்ப எண்ணிக்கையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர். குறிப்பாக கரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து ஒரு அரசுப் பள்ளி மாணவர் கூட விண்ணப்பிக்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

6.கபாலீஸ்வரர் கோயிலில் அன்னைத் தமிழில் அர்ச்சனை - பக்தர்கள் வரவேற்பு

சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் நேற்றுமுதல் (ஆக .05) அன்னைத் தமிழில் அர்ச்சனை திட்டம் தொடங்கப்பட்டது.

7.கர்நாடகா- பள்ளிகள், கல்லூரிகள் ஆக.23 திறப்பு!

கர்நாடகா மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகள் ஆக.23ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

8.இந்திய மகளிர் ஹாக்கி அணி வீராங்கனைகளுக்கு ஊக்கம் - 'சக்தே இந்தியா' கபீர்கானாக மாறிய ஷாருக் கான்

இந்திய மகளிர் ஹாக்கி அணி நன்றாக விளையாடினீர்கள். இந்தியாவில் இருக்கும் ஒவ்வொருவரையும் நீங்கள் அனைவரும் ஊக்கப்படுத்தியிருக்கிறீர்கள் என நடிகர் ஷாருக் கான் மனதாரப் பாராட்டியுள்ளார்.

9.கருணாநிதி 3ஆம் ஆண்டு நினைவு நாள்: 2ஆவது ஆண்டு மெய்நிகர் மாரத்தான் போட்டிகள்!

கலைஞர் நினைவு பன்னாட்டு 2ஆவது ஆண்டு மெய்நிகர் மாரத்தான் போட்டிக்கான முதல் பதிவை சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

10.'ஆன்லைன் மருந்து விற்பனையை நெறிப்படுத்த வேண்டும்' - மருந்து வணிகர்கள் சங்கம் கோரிக்கை

திருவள்ளூர்: ஆன்லைன் மருந்து விற்பனை முறையில் அப்போலோ, மெட் பிளஸ் உள்ளிட்ட மருந்தகங்களுக்கு மட்டும் சலுகைகள் வழங்கப்படுவதாகவும், ஆன்லைன் மருந்து விற்பனையை முறைப்படுத்துமாறும் கோரி மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.