சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (மார்ச் 30) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பட்டு வளர்ச்சித் துறையின் சார்பில், பட்டு விவசாயிகள் மற்றும் பட்டு நூற்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில அளவில் சிறந்த மூன்று பட்டு விவசாயிகள், சிறந்த மூன்று தானியங்கி பட்டு நூற்பாளர்கள் மற்றும் சிறந்த மூன்று பலமுனை பட்டு நூற்பாளர்களுக்கு முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசாக முறையே ரூ. 1,00,000; ரூ.75,000 மற்றும் ரூ.50,000-க்கான பரிசுத்தொகைகளை வழங்கி சிறப்பித்தார்.
பட்டு வளர்ச்சித்துறையின் சார்பில் மாவட்ட அளவில் மூன்று சிறந்த பட்டு விவசாயிகளும், மாநில அளவில் மூன்று சிறந்த பட்டு விவசாயிகளும், மூன்று சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளர்களும் மற்றும் மூன்று சிறந்த பலமுனை பட்டு நூற்பாளர்களும் தேர்வுக் குழுவினரால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
அதன்படி, மாநில அளவில் சிறந்த பட்டு விவசாயிக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான பரிசுத் தொகை தேனி மாவட்டத்தைச் சேர்ந்த பா. சின்னன் அவர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.75,000-க்கான பரிசுத் தொகை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கா. பூபாலகிருஷ்ணன் அவர்களுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.50,000-க்கான பரிசுத்தொகை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த செ.கமலம் அவர்களுக்கும் வழங்கப்பட்டன.
அத்துடன் மாநில அளவில் சிறந்த தானியங்கி பட்டு நூற்பாளருக்கான முதல் பரிசாக ஒரு லட்சம் ரூபாய்க்கான பரிசுத்தொகை திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரா. பெருமாள் அவர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.75,000-க்கான பரிசுத்தொகை கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த ச.சேகர் உள்ளிட்ட விருது பெற்ற 9 பேர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மொத்தம் 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கான பரிசுத் தொகையினை வழங்கி சிறப்பித்தார்.
இதையும் படிங்க: 'டெல்லியில் திமுக அலுவலகம்.. அடுத்த பயணம் புதுடெல்லியை நோக்கி...'