சென்னையில் நாளுக்கு நாள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது.
சில மண்டலங்களில் மட்டும் தொற்றுப் பரவல் சற்று அதிகரித்துள்ளது. அவற்றைக் குறைக்க அந்தந்த மண்டலங்களில் மருத்துவ முகாம்களும், விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நடத்தப்படுகின்றன.
89% குணமடைந்தோர்
கரோனா வைரஸ்(தீநுண்மி) தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடும் 89 ஆக குறைந்துள்ளது. இரண்டு மண்டலங்களில் சிகிச்சைபெற்று வருபவர்களில் எண்ணிக்கை 3000-க்கும் மேல் உள்ளது.
சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 30 முதல் 39 வயது உடையவர்கள் 21.34 சதவீதம், 20 முதல் 29 வயது உடையவர்கள் 19.20 சதவீதம் ஆகும்.
அண்ணா நகர் | 3129 |
தேனாம்பேட்டை | 3096 |
ராயபுரம் | 2583 |
கோடம்பாக்கம் | 2483 |
அடையாறு | 2014 |
திரு.வி.க. நகர் | 2828 |
தண்டையார்பேட்டை | 2019 |
அம்பத்தூர் | 2130 |
வளசரவாக்கம் | 1542 |
ஆலந்தூர் | 1312 |
பெருங்குடி | 1504 |
மாதவரம் | 1209 |
திருவொற்றியூர் | 746 |
சோழிங்கநல்லூர் | 813 |
மணலி | 357 |
மேலும், ஆண்கள் 58.76 சதவீதமும், பெண்கள் 41.24 சதவீதமும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இதுவரை மொத்தம் இரண்டு லட்சத்து 94 ஆயிரத்து 073 பேர் வைரஸ்(தீீநுண்மி) தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதில், இரண்டு லட்சத்து 60 ஆயிரத்து 367 குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். எஞ்சியுள்ள 29 ஆயிரத்து 256 பேரும் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், 4,450 பேர் வைரஸ் தொற்றினால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.