கரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்து அமெரிக்கா, இங்கிலாந்து, பிலிப்பைன்ஸ், குவைத், கத்தாா் நாடுகளில் சிக்கித் தவித்த 570 இந்தியா்கள் 5 சிறப்பு விமானங்கள் மூலம் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.
அவர்களில் அமெரிக்கா சிக்காகோவிலிருந்து 59 பேர், பிலிப்பைன்ஸ் மணிலாவிலிருந்து 41 பேர், இங்கிலாந்து லண்டனிலிருந்து 124 பேர், கத்தார் தோகாவிலிருந்து 179 பேர், குவைத்திலிருந்து 167 பேர் ஆவர். சென்னை விமானநிலையம் வந்தடைந்த அவர்கள் 14 நாள்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி அரசின் இலவச தங்குமிடங்களில் 326 பேரும், கட்டண ஹோட்டல்களில் 236 பேரும், அரசின் சிறப்பு அனுமதி பெற்று வீடுகளில் 8 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 14 நாள்களுக்குப் பிறகு அவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்விருக்கின்றனர்.
இதையும் படிங்க: விமானநிலையத்தில் பயணிகளுக்கும் மருத்துவக் குழுவினருக்கும் இடையே சலசலப்பு!