கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆன்லைன் வகுப்பால் ஏற்படும் பாதிப்புகள், ஸ்மார்ட்போன் பயன்பாடுகள் குறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், 10.1 விழுக்காடு மாணவர்கள் மட்டுமே கற்றலுக்கு செல்போனை பயன்படுத்துகின்றனர்.
52.9 விழுக்காட்டினர் உரையாடலுக்கு (சாட்டிங்) பயன்படுத்துகின்றனர். மொத்தமாக செல்போன் பயன்பாடு கல்வியைப் பாதித்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக 10 வயது குழந்தைகளில் 37.8 விழுக்காட்டினர் பேஸ்புக் பயன்படுத்துவதும், 24.3 விழுக்காட்டினர் இன்ஸ்டாகிராம் பயன்படுத்துகின்றனர்.
நிலையான வழிகாட்டுதல்கள் தேவை
8 முதல் 18 வயதுடைய மாணவர்களில் 30 விழுக்காட்டினர் சொந்தமாக செல்போன் வைத்துள்ளனர். 37.15 விழுக்காடு மாணவர்களிடையே கவன சிதறல் ஏற்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வு நாட்டில் உள்ள 6 மாநிலங்கள், 60 பள்ளிகளின் குழந்தைகள், பெற்றோர்கள், ஆசிரியர்களிடம் நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தேசிய குழந்தைகள் நல ஆணையம், கரோன தொற்று ஊரடங்கு காலத்தில் மாணவர்களின் ஆன்லைன் கல்வி கற்றல் திறனைப் பாதித்துள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக செல்போனை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதற்கான நிலையான வழிகாட்டுதல்களை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளது.
இதையும் படிங்க: விலையில்லா 2 ஜிபி டேட்டா திட்டம் - எடப்பாடி பழனிசாமி கோரிக்கை