தமிழ்நாடு முழுவதும், கரோனா தொற்று அதிகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, சென்னையில் ராயபுரம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, அண்ணாநகர், திரு.வி.க. நகர் போன்ற இடங்களில் அதன் தாக்கம் அதிதீவிரமாக உள்ளது. இதன் பரவலைத் தடுக்க மாநகராட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுவருகிறது.
இது வரையிலும் மொத்தம் 72 ஆயிரத்து 500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தப் பரவலைத் தடுக்க, அடர்த்தியான பகுதிகளில் வாழும் மக்களை மாநகராட்சி சார்பில் உருவாக்கப்பட்ட மையங்களில் தங்க வைத்து, அவர்களுக்கு உணவளிக்கப்பட்டு வருகிறது.
அங்குள்ள அனைவருக்கும் தினமும் கபசுரக் குடிநீர் வழங்கப்படுகிறது. இது வரையிலும் 49 ஆயிரத்து 587 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
சென்னையில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்களின் மண்டல வாரியான பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் பின்வருமாறு:
ராயபுரம் - 7,340 பேர்
திரு.வி.க. நகர் - 3,993 பேர்
வளசரவாக்கம் - 2,385 பேர்
தண்டையார்பேட்டை - 6,149 பேர்
தேனாம்பேட்டை - 5,765 பேர்
அம்பத்தூர் - 2,078 பேர்
கோடம்பாக்கம் - 5,084 பேர்
திருவொற்றியூர் - 1,801 பேர்
அடையாறு - 3,069 பேர்
அண்ணா நகர் - 5,494 பேர்
மாதவரம் - 1,497 பேர்
மணலி - 869 பேர்
சோழிங்கநல்லூர் - 1,069 பேர்
பெருங்குடி - 1,076 பேர்
ஆலந்தூர் - 1,133 பேர்
மேலும் 1,146 பேர் இந்த கரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இதையும் படிங்க: 'ஒப்பாரி ராகமான இசை கலைஞர்களின் வாழ்வாதாரம்?'