சென்னை: கீழ்ப்பாக்கம் மாநகரப் பேருந்துகளில் ஸ்மார்ட்போன்கள் அதிகளவில் திருடுபோவதாகப்போலீசாருக்கு புகார்கள் குவிந்துவந்தன. இதனால், தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில், கொருக்குப்பேட்டையை சேர்ந்த உமாபதி, சரவணன், நரேஷ் , விநாயகம், ஃபாரூக் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
செல்போன் திருட்டில் எக்ஸ்பர்ட்: அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் சென்னை மாநகரப் பேருந்துகளில் காலை நேரம் 8 மணியிலிருந்து 11 மணி வரை செல்லும் அலுவலக பயணிகளை குறி வைத்து செல்போன்களை திருடிவந்ததும். குறிப்பாக சென்னை பாரிமுனை - சி.எம்.பி.டி வழித்தடம், தி-நகர் - திருவான்மியூர் வழித்தடம், சோழிங்கநல்லூர் - கிண்டி வழித்தடத்தில் திருடுவதும் தெரியவந்துள்ளது.
போலீசாரிடம் சிக்கியது எப்படி: இவர்கள் ஒரு வழித்தடத்தில் இரண்டு மூன்று செல்போன்களை திருடிய உடன், வேறு வழித்தடத்திற்கு சென்றுவிடுவர். இந்த கும்பல் ஏறும் பேருந்தை ஆட்டோவில் வரும் கூட்டாளி பின் தொடர்வார். திருடப்படும் செல்போன்கள் ஆட்டோவில் உள்ள நபரிடம் உடனடியாக கொடுக்கப்பட்டுவிடும். அப்படி ஆட்டோவில் செல்போன் கைமாற்றப்படும்போது மாட்டிக்கொண்டுள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட செல்போன்களை திருடி விற்றுள்ளனர்.
இதுக்குக் கூடவா குருநாதர் வச்சிருப்பீங்க!.. குறிப்பாக முருகன் என்ற செல்போன் திருடன் இவர்களுக்கு குருநாதராக இருந்து தொழில் கத்து கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு வரும் பயிற்சி எடுத்து செல்போன் திருட்டில் ஈடுபட்டது தெரியவருகிறது.
நன்கு தொழில் கற்றவுடன் கூடுதல் ஆட்களை சேர்த்துக்கொண்டு செல்போன்களை திருட திட்டமிட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மூலம் வரும் பணத்தை சூதாட்டம், சொகுசு வாழ்க்கைக்கு பயன்படுத்திவந்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் நகை பறிக்கும் ஆசாமிகள் : பதைபதைக்கும் சிசிடிவி காட்சி