சென்னை: தமிழ்நாடு சுகாதாரத்துறை இன்று (மே 8) வெளியிட்டுள்ள தகவலின்படி, "தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 16 ஆயிரத்து 858 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 47 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 51 லட்சத்து 22 ஆயிரத்து 598 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 34 லட்சத்து 54 ஆயிரத்து 353 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்குள்ளாகி இருந்தது கண்டறியப்பட்டது.
தற்பொழுது 478 பேர் மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். குணமடைந்த 68 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 34 லட்சத்து 15 ஆயிரத்து 850ஆக உயர்ந்துள்ளது. கரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உயிரிழப்புகள் ஏற்படவில்லை. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 38ஆயிரத்து 25ஆக நீடிக்கிறது.
சென்னையில் அதிகபட்சமாக 23 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 10 நபர்களுக்கும், கோயம்புத்தூரில் நபர்களுக்கும், சேலத்தில் இரண்டு நபர்களுக்கும், திருச்சியில் மூன்று நபர்களுக்கும், கடலூர், காஞ்சிபுரம், நாமக்கல், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் என 47 நபர்களுக்குப் புதிதாக வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் நோய்த்தொற்றினால் பாதிக்கப்படுபவர்கள் விகிதம் 0.5 விழுக்காடாக உள்ளது. அதிகபட்சமாக செங்கல்பட்டில் 2.9 விழுக்காடும், சென்னையில் 1.6 விழுக்காடும் பாதிப்பு விதிகம் பதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் 265 பேர் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். அதற்கு அடுத்ததாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 127 நபர்களும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 15 நபர்களும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 14 நபர்களும், திருவள்ளூர் மாவட்டத்தில் 12 நபர்களும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.