ETV Bharat / city

தமிழ்நாட்டில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று உறுதி! - coronavirus infection in Tamil Nadu

சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது. இதன்மூலம், தமிழ்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,520ஆக உயர்ந்துள்ளது.

coronavirus infection
coronavirus infection
author img

By

Published : Apr 20, 2020, 7:48 PM IST

Updated : Apr 20, 2020, 8:07 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

தமிழ்நாட்டில் 2 லட்சத்து 10 ஆயிரத்து 538 பயணிகள் விமான நிலையங்களில் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டுள்ளனர். அதில், ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 193 பேர் நேற்று (ஏப்ரல் 19) வரை வீட்டில் 28 நாட்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறையின் தொடர் கண்காணிப்பில் இருந்தனர். அவர்களில் 28 நாட்கள் தொடர் கண்காணிப்பை 87 ஆயிரத்து 259 பேர் இன்று முடித்துள்ளனர். தற்போது ஒரு லட்சத்து 8 ஆயிரத்து 337 பேர் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர்.

தொற்று அதிகளவில் பரவியுள்ள நாடுகளிலிருந்து வந்த 145 பயணிகள், விமான நிலையங்களின் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் தனிமைப்படுத்தப்பட்டு அரசு கண்காணிப்பில் உள்ளனர். மேலும், விமான நிலையம் அருகில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவமனையின் தனி வார்டில் 2 ஆயிரத்து 12 பயணிகள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

46 ஆயிரத்து 985 பேரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு பெறப்பட்டன. இவர்களில் 1,520 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 38 ஆயிரத்து 82 பேருக்கு நோய் தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது. 2 ஆயிரத்து 108 பேரின் ரத்தம், சளி ஆகியவை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. 5,275 பேருக்கு மீண்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் மேலும் 43 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 457 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் நேற்று வரை 1477 பேரும், இன்று 43 பேரும் என மொத்தம் 1,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று வரை 15 பேர் உயிரிழந்த நிலையில், இன்று இருவர் உயிரிழந்தனர். இதன்மூலம், தமிழ்நாட்டில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது. தீவிர செயற்கை சுவாசம் அளிப்பதற்கான 3,371 வென்டிலேட்டர், 29,074 படுக்கைகளுடன் கூடிய தனி வார்டுகள் தயார் நிலையில் உள்ளன. மேலும் இன்று நடத்தப்பட்ட ரத்த பரிசோதனை முடிவுகளில் சென்னை மாவட்டத்தில் 18 பேருக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று பேருக்கும், திருச்சி, தென்காசி மாவட்டங்களில் தலா நான்கு பேருக்கும், திண்டுக்கல், அரியலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் தலா இருவரும், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நாகப்பட்டினம், பெரம்பலூர், திருவாரூர், தூத்துக்குடி, திருப்பூர் மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது.

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள 35 மாவட்டங்களின் நிலவரம்:

Last Updated : Apr 20, 2020, 8:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.