சென்னை: துபாயிலிருந்து கிளம்பிய எமிரேட்ஸ் விமானம் இன்று சென்னை வந்தடைந்தது. இந்த விமான பயணிகளிடம் சுங்கத்துறை அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது, 39 மதிக்கத்தக்கவருடைய உடைமைகளில் கடத்தல் தங்கம் கண்டிபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த அலுவலர்கள், தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
முதல்கட்ட விசாரணையில், கைதானவர் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த நீலகண்டன்(39) என்பதும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 928 கிராம் தங்கத்தின் மதிப்பு 41.77 லட்சம் என்பதும் தெரியவந்துள்ளது. துபாயிலிருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்திவரப்படுவது வாடிக்கையாகிவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் 9 கிலோ தங்கம் பறிமுதல்!