சென்னை: நைஜீரியாவில் இருந்து தோஹா வழியாக தமிழ்நாடு வந்த நபருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியாகியுள்ளது. இதுதான் தமிழ்நாட்டில் முதல் ஒமைக்ரான் பாதிப்பாக கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருடன் தொடர்புடைய மற்றும் பயணித்தவர்களையும் சேர்த்து 89 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி இருந்தது.
இவர்களில் 13 பேரின் முடிவுகளில் ஒமைக்ரான் தொற்று இல்லை என்பது உறுதியானது. மேலும் 41 பேரின் மாதிரி முடிவுகளில் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உள்ளதாக தற்போது சுகாதாரத் துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 34 ஆக உயர்ந்துள்ளது
இதையும் படிங்க: Omicron: ஒமைக்ரான் தொற்று குறித்து மக்கள் பயப்படத் தேவையில்லை - ராதாகிருஷ்ணன்