சென்னை: ஆவடி அருகே வெள்ளனூர் வெளிவட்டச் சாலையில் உள்ள பாரதி நகரைச் சார்ந்தவர் மாலதி. கடந்த 14ஆம் தேதி இவரது மகள் திருமணம் முடிந்த நிலையில், நேற்று (பிப்ரவரி 21) தனது சகோதரர் முறை உறவினர் நாகராஜாவைப் பார்ப்பதற்காக மாலதி வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இந்நிலையில், திரும்பிவந்து பார்க்கும்பொழுது வீட்டின் கிரில் கேட் உடைக்கப்பட்டு வீட்டினுள் இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த 32 சவரன் தங்க நகைகள் கொள்ளைபோனதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து உடனடியாக டேங்க் பேக்டரி காவல் நிலையத்தில் மாலதி புகார் அளித்தார். அப்புகாரின்பேரில் காவல் துறையினர் மாலதியின் வீட்டிற்குச் சென்றனர். மேலும் கைரேகை வல்லுநர்கள் அங்கு சென்று கைரேகைப் பதிவுகளை எடுத்துச் சென்றனர்.
பிறகு டேங்க் பேக்டரி காவல் துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சிசிடிவி கேமராக்களை ஆய்வுசெய்து, கொள்ளையர்களை வலைவீசித் தேடிவருகின்றனர்.
தேர்தல் நேரத்தில் காவலர்கள் அங்கங்கு தேர்தல் பணியிலிருக்கும் நேரத்தைப் பார்த்து கொள்ளையர்கள் கொள்ளையடித்தார்கள் என்பது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: குழாய்த் தகராறு: இளைஞர் அடித்தே கொலை