ETV Bharat / city

Covid Guidelines: ஊரடங்கு விதிமீறல்: 307 வாகனங்கள் பறிமுதல் - covid restrictions

கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை மீறியதாக முழு ஊரடங்கான இன்று (ஜன.16) 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

curfew in tamilnadu
முழு ஊரடங்கு
author img

By

Published : Jan 16, 2022, 5:11 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், தமிழ்நாடு அரசு ஜனவரி 6ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை வார நாள்களில், இரவு 10.00 மணி முதல் அதிகாலை 05.00 மணி வரையில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அறிவித்துள்ளது.

இதனால் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில், இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையன்று முழு நேர ஊரடங்கு பணிகளில், சென்னை பெருநகர காவல் சரக எல்லைக்குள்பட்ட பகுதியில் மொத்தம் 312 வாகன தணிக்கை சாவடிகள் அமைக்கப்பட்டு 10 ஆயிரம் காவலர்கள் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

வாகனங்கள் பறிமுதல்

இந்நிலையில், நேற்று (ஜன.15) இரவு நேர ஊரடங்கில், கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகள் மீறியது தொடர்பாக 103 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அத்தியாவசிய தேவையின்றி வெளியே சுற்றிய 280 இருசக்கர வாகனங்கள், 16 ஆட்டோக்கள் மற்றும் 11 இலகுரக வாகனங்கள் என மொத்தம் 307 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

curfew in tamilnadu
முழு ஊரடங்கு

மேலும், முகக்கவசம் அணியாதது தொடர்பாக 5,469 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, ரூ. 10,93,800 அபராதமும், தகுந்த இடைவெளி கடைபிடிக்காதது தொடர்பாக 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு. ரூ.13,500 அபராதமும் வசூலிக்கப்பட்டது.

இன்று (ஜன.16) ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால், சென்னை பெருநகர காவல் குழுவினர் நாளை காலை 05.00 மணி வரை தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். பொதுமக்கள் மிக அத்தியாவசிய தேவையின்றி வெளியில் வருவதை தவிர்க்கும்படி சென்னை பெருநகர காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

curfew in tamilnadu
முழு ஊரடங்கு

இதையும் படிங்க: 24 மணி நேரத்தில் 3 லட்சத்தை நெருங்கும் கரோனா பாதிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.