சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் இன்று ஏப்.10ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டில் புதிதாக 20 ஆயிரத்து 53 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தப் பரிசோதனையில், தமிழ்நாட்டில் மேலும் 30 நபர்களுக்கு, புதிதாக கரோனா வைரஸ் தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை 6 கோடியே 46 லட்சத்து 41 ஆயிரத்து 972 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறிவதற்கான ஆர்டி-பிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது.
இதனால், தமிழ்நாட்டில் 34 லட்சத்து 53 ஆயிரத்து 84 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டன. இவர்களில், தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைபடுத்தும் மையங்களில் 228 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்த 31 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 14 ஆயிரத்து 831 என உயர்ந்துள்ளது.
சென்னையில் 16பேருக்கு கரோனா: கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக யாரும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பினால் இறக்கவில்லை. இதன் மூலம் இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 25 என்ற எண்ணிக்கையில் உள்ளது.
மேலும், சென்னையில் புதிதாக 16 நபர்களுக்கும், செங்கல்பட்டில் மூன்று நபர்களுக்கும், கோயம்புத்தூர் மதுரை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 நபர்களுக்கும், கன்னியாகுமரி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு நபர்களுக்கும் என 30 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டின் பிற 28 மாவட்டங்களில் புதிதாக யாருக்கும் பாதிப்பு கண்டறியப்படவில்லை. சென்னையில் 96 நபர்களும் ,செங்கல்பட்டில் 30 நபர்களும், கோயம்புத்தூரில் 16 நபர்களும் காஞ்சிபுரத்தில் பத்து நபர்களும் திருவள்ளூரில் 13 நபர்களும் என அதிக அளவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதையும் படிங்க: நான்காவது அலை வராமல் தடுக்க தடுப்பூசி அவசியம்... மா சுப்பிரமணியன் எச்சரிக்கை...