சென்னை: மயிலாப்பூர் கபாலி தோட்டத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுப்பிரமணி. இவரது மனைவி கீதா தனது 3 மாத குழுந்தைக்கு (கௌசிக்) நேற்றிரவு(ஏப்ரல்.01) பால் கொடுத்து தூங்க வைத்து விட்டு மற்ற வேலைகள் செய்ய சென்றுள்ளார். இரவு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சுப்பிரமணி குழந்தை கௌசிக் எந்த அசைவுகளும் இல்லாமல் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனே உறவினர்கள் உதவியுடன் எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு குழந்தை கௌசிக்கை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர், குழந்தை கௌசிக் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த மயிலாப்பூர் காவல்துறையினர் குழந்தை கௌசிக் இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குழந்தை கௌசிக்கின் உடற்கூராய்வு அறிக்கை வந்த பின்னரே குழந்தை இறப்பிற்கான காரணம் தெரியவரும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: காற்றுமாசு அதிகரிப்பு: புழுதி நகரமாக மாறிய "ஹூப்ளி"