ETV Bharat / city

சென்னை மாநகராட்சிப் பொறியாளர்கள் இடமாற்றம்

author img

By

Published : Sep 28, 2021, 9:45 AM IST

சென்னை மாநகராட்சி மூன்று தலைமைப் பொறியாளர்களின் துறைகள் மாற்றியமைத்து மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சி

அதன்படி மாநகராட்சி தலைமைப் பொறியாளர்களில் ஒருவரான நந்தகுமார் சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால்கள், சிங்காரச் சென்னை 2.0, பேரிடர் மேலாண்மை போன்று அவர் வசம் இருந்த முக்கியத் துறைகள் தலைமைப் பொறியாளர் ராஜேந்திரனிடம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அலுவலர்கள் சோதனை நடத்தியபோது நந்தகுமார் இல்லத்திலும் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

துறை ரீதியாகப் பணியிடை நீக்கம் செய்ய வாய்ப்பு இருக்கிறது எனக் கூறப்பட்டிருந்த நிலையில் நந்தகுமார் நிர்வாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது நந்தகுமாருக்குத் தலைமைப் பொறியாளர் (பூங்கா) வழங்கப்பட்டுள்ளது. தலைமைப் பொறியாளர் காளிமுத்துவுக்கு கட்டடத் துறை மற்றும் மயானம் பராமரிப்புத் துறை வழங்கப்பட்டுள்ளது. மேலும், தலைமைப் பொறியாளராக இருக்கும் மகேசன், துரைசாமிக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: 'செவிலியரைப் பணி நிரந்தரம் செய்வதே நல்லரசின் கடமை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.