ETV Bharat / city

விபத்துகளில் உயிரிழந்த கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.3 கோடி நிவாரணம் - ரூபாய் 3 கோடி நிவாரணம்

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், விபத்துகளில் உயிரிழந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் நியமனதாரர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.3 கோடி நிவாரணம் வழங்கினார்.

Stalin
Stalin
author img

By

Published : Jul 6, 2022, 6:40 PM IST

சென்னை: தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், பணியிடங்களில் ஏற்பட்ட விபத்தில் இறந்த 60 கட்டுமான தொழிலாளர்களின் நியமனதாரர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம், மொத்தம் ரூ.3 கோடி பணியிடத்து விபத்து மரண நிவாரணத் தொகையாக 7 நியமனதாரர்கள் மற்றும் வாரிசுதாரர்களுக்கு நிவாரணத் தொகைக்கான ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று (ஜூலை 6) வழங்கினார்.

தமிழ்நாடு அரசால் கட்டுமான தொழில்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் நலன் காக்க தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர்கள் நல வாரியம் தோற்றுவிக்கப்பட்ட நல வாரியத்தில் பதிவு செய்த தொழிலாளர்களுக்கு கல்வி, திருமணம், மகப்பேறு, கண்கண்ணாடி, ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம், விபத்து ஊனம், இயற்கை மரணம், தனிநபர் விபத்து மரணம், பணியிடத்தில் விபத்து மரணம், வீடு கட்டும் திட்டம் போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், கட்டுமான பணியிடத்தில் விபத்தில் இறக்கும் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிவாரணத் தொகையும் வழங்கப்படுகிறது.

இதன் மூலம், வாரியத்தில் நிலுவையில் உள்ள கேட்பு மனுக்கள் விரைந்து ஒப்புதல் அளிக்கப்பட்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் அதாவது 7.05.2021 முதல் 31.05.2022 வரை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 2,23,499 பயனாளிகளுக்கு 189 கோடியே 92 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

கடந்த ஓராண்டில் மேலும், 7.05.2021 முதல் 31.05.2022 வரை தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் 6,21,351 தொழிலாளர்கள் புதிய உறுப்பினர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், 30.04.2021 வரை பணியிடத்தில் விபத்து ஏற்பட்டு இறந்தவர்களுக்கு தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் வாயிலாக ரூ.5 லட்சம் நிவாரணம் கோரி விண்ணப்பித்த மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, 60 கட்டுமான தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு மொத்தம் ரூ.3 கோடி நிவாரணத் தொகைக்கான ஆணைகள் இன்று வழங்கப்பட்டன.

இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் டைசல் நிறுவனத்துடன் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.