ETV Bharat / city

அரியர் மாணவர்களுக்கு 21ஆம் தேதி முதல் தேர்வு - சென்னை பல்கலை., அறிவிப்பு! - சென்னை அண்மைச் செய்திகள்

சென்னை பல்கலைக் கழகத்தில் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு, வரும் 21ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

madras university
madras university
author img

By

Published : Dec 15, 2020, 9:38 PM IST

சென்னை: சென்னை பல்கலைக் கழத்தின் அரியர் தேர்வுகள், வரும் 21ஆம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை பல்கலைக்கழகத்தில் படித்து, அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு விதிமுறைகளின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 26ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அந்த தேர்வு முடிவு அடிப்படையில் மாணவர்களுக்கான துணைத் தேர்வுகள் டிசம்பர் 21ஆம் தேதி முதல் நடத்தப்பட உள்ளது. சென்னை பல்கலைக் கழகத்தில் படித்து இளங்கலை மற்றும் முதுகலை பாடப்பிரிவுகளில் அரியர் வைத்துள்ள அனைத்து மாணவர்களும் 2020-2021ஆம் கல்வி ஆண்டில் தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். அவர்கள் 2020 நவம்பர், ஏப்ரல் 2021, நம்பர் 2021 ஆகிய பருவங்களில் நடைபெறும் தேர்வினை எழுதலாம்.

ஏற்கனவே தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுக்கு கூடுதல் மதிப்பெண் வேண்டும் எனில் அரியர் தேர்வினை எழுதலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, பல்கலைக்கழகத்தில் படித்து, தேர்வு கட்டணம் செலுத்திய அனைத்து மாணவர்களும் அரியர் தேர்வில் தேர்ச்சி அடைய செய்யப்படுவார்கள் என அரசு அறிவித்திருந்தது. அதனடிப்படையில் பல்கலைக்கழகம் மாணவர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் வழங்கி தேர்ச்சி பெற்றதாக அறிவித்தது.

அரசின் இந்த முடிவை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றனர். நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே மாணவர்கள் வழக்கில் தீர்ப்பு முடிவு வரும்வரை காத்திருக்காமல் மேற்படிப்பு படிப்பதற்காக தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்று செல்லலாம் என பல்கலைக்கழக அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஐஐடி, அண்ணா பல்கலை.,யில் கரோனா தடுப்பு பணி தீவிரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.