சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று மார்ச் 18, தமிழ்நாட்டின் 2022-23 ஆண்டுக்கான நிதிநிலையை (Tamil Nadu budget of 2022-23) தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மனு தாக்கல் செய்தார்.
சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கிய உடனேயே அதிமுகவினர், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியதை சுட்டிக்காட்டி அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, பேசவாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத்தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர், நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, 'ரூ.1.20 கோடி நடப்பாண்டில் கடன் வாங்குவதாக அறிவித்துள்ளார்கள். ரூ.4.85 கோடி கடன் மட்டுமே அதிமுக ஆட்சியை விட்டுச்சென்றபோது இருந்தது. மூலதனச் செலவினங்கள் மட்டுமே கடன் பெறப்பட்டன. இரண்டு ஆண்டுகளில் ரூ.2.28 கோடி கடன் பெற வேண்டிய சூழல் தற்போது ஏற்பட்டுள்ளது. கரோனா காலம் வருவாய் குறைவு காரணமாக மட்டுமே அதிமுக ஆட்சியில் கடன் பெறப்பட்டது.
மகளிர் உரிமைத் தொகை
கரோனா காலகட்டத்துக்குப்பிறகு, வருவாய் அதிகரித்துள்ள நிலையில், தற்போது கடன் அதிகரித்துள்ளது. எனவே, திமுக அரசு முறையாக செயல்படவில்லை என்பது தெரிகிறது. மாதம் தோறும் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 வழங்குவது, கல்விக்கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதிகள் இடம்பெறவில்லை. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல, பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.
ரகுராம் ராஜன் குழு
இதனால், விலை வாசி அதிகரித்து வருகிறது. குறிப்பாக கட்டுமானப்பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. கட்டுமானப்பொருட்கள் அத்தியாவசியப்பட்டியலில் சேர்க்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்து இருந்தது.
அதை நிறைவேற்றவில்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத்திட்டத்தை நிறைவேற்ற வில்லை. ரகுராம் ராஜன் குழு என்ன பரிந்துரை செய்தது என்பது பற்றிய விவரம் இந்த பட்ஜெட்டில் இல்லை.
வார்த்தை ஜாலங்களால் உருவாக்கப்பட்ட வாய் தான், இந்த பட்ஜெட். மேலும் இந்த பட்ஜெட் வெறும் ஏமாற்று வெத்துவேட்டுதான். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மாலை 5 மணி முதல் 6 மணிவரை 6 விழுக்காடு வாக்குப்பதிவாகி உள்ளது. கள்ள ஓட்டு போடப்பட்டுள்ளது. சென்னை மாநகரில் உள்ள மூவாயிரம் ரவுடிகளைக் கைது செய்து இருந்தால், கள்ள ஓட்டு போடுவதைத் தவிர்த்து இருக்க முடியும்' எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: நீர்வளத் துறைக்கு ரூ. 7,338.36 கோடி ஒதுக்கீடு