ETV Bharat / city

கர்வங்கள் அழிந்து காதல் ‘அலைபாயுதே’ - #20yearsofalaipayuthey

‘அப்படி என்ன காதலிச்ச.... துரத்துன, அப்போ சிரிக்க வெச்ச இப்போ அழ வைக்கிற’ என ஷக்தி கூறும்போது அவள் காதலில் விழுந்துவிட்டதையும், ‘உனக்கு அசிங்கமா மக்கா ஒரு பொண்டாட்டி கிடைக்கணும்’ என்று அவள் கூறும்போது காதலிலிருந்து சூழ்நிலை காரணமாக ஷக்தி விலக நினைப்பதையும் லாவகமாக உணர்த்தியிருப்பார்

alaipayuthey
alaipayuthey
author img

By

Published : Apr 16, 2020, 3:51 PM IST

Updated : Apr 16, 2020, 4:20 PM IST

தமிழில் காதலை மையமாக வைத்து திரைப்படங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. ஆனால், மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படம் வெறும் காதலை மட்டும் பேசாமல் காதலுக்கு பின் நடக்கும் திருமணம், அதன் பின் நடக்கும் ஈகோ பிரச்னைகள் என அனைத்தையும் பேசியது.

அலைபாயுதே
அலைபாயுதே

‘அலைபாயுதே’ திரைப்படம் என்பதைவிடவும் அப்போதைய காதலர்களுக்கு (இப்போதும்தான்), காதலிப்பவர்கள் எப்படி திருமணம் செய்துகொள்ளலாம் என்பதற்கு புது ஐடியாவை கொடுத்தது.

ஹீரோ ஹீரோயினை துரத்த முதலில் ஹீரோயின் ஹீரோவை விரட்டி பின் அவனை திருமணம் செய்துகொள்வது என மிக மிக எளிமையான நாட்டினைக் கொண்டு ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் இப்போதும் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது அலைபாயுதே.

காதல் என்றால் இருவரும் எப்போதும் சிரித்து பேசிக்கொண்டிருக்க வாய்ப்பில்லை. ’காதலிக்கும்போது இருவரும் விலகி இருந்தாலும் நெருங்கி இருப்பார்கள் திருமணம் ஆன பிறகு இருவரும் நெருங்கி இருந்தாலும் அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் ஏதோ ஒரு இடைவெளியை காலம் காதலர்களுக்கு கொடுக்கும்’ என்பதை தெளிவாக பேசிய படம்.

அலைபாயுதே
அலைபாயுதே

கோலிவுட்டில் வந்திருக்கும் அனைத்து காதல் படங்களிலும் காதலை வெளிப்படுத்தும் காட்சி ஒருவித அயற்சியை கொடுத்துக்கொண்டிருந்தது. ஆனால், அலைபாயுதேவில் ஷக்தியிடம் கார்த்திக் காதலை வெளிப்படுத்திய காட்சி இன்றுவரை தமிழ் சினிமாவுக்கு புத்துணர்ச்சி. இன்னமும் அந்தக் காட்சியை யாராலும் ஓவர் டேக் செய்ய முடியவில்லை.

2000ஆம் ஆண்டில் உலகம் வேகமாக தன்னை மாற்றிக்கொண்டிருந்தது. கணினிகள், சாஃப்ட்வேர் என புது புது சொற்கள் மனிதர்களிடத்தில் அதிகளவில் புழங்கிக்கொண்டிருந்தன. அந்த மீட்டரை பிடித்தார் மணிரத்னம். அலைபாயுதே ஒரு புதுவித அனுபவத்தை திரையில் கொடுத்தது. முக்கியமாக, ஷக்தி மற்றும் கார்த்திக் ஆகிய இருவரின் உச்சரிப்பு, முக பாவனைகள் என அனைத்தும் யதார்த்தத்தை மீறாமல் ரசிகர்களுக்கு நன்கு பரிட்சயமாக இருந்தன.

அலைபாயுதே
அலைபாயுதே

காதல் எப்போதும் தான் சொல்ல வந்ததை நேரடியாக சொல்லாது. மூக்கை தொடுவதற்கு தலையை சுற்றுவதுபோல் ஒரு சொல்லுக்காக உலகத்தை சுற்றிவரும். அதுதான் காதலின் யதார்த்தம். அதனைப் பிடித்து மணிரத்னம் நேர்த்தியாக வசனத்தை எழுதினார்.

ஏழு மில்லியன் மக்கள் தொகையை எழுபதாக குறைத்து அதில் ஒரு பெண்னை தேட முடியாதா என்று கூறுமளவு பிராக்டிக்கலான இளைஞன் கார்த்திக். துறு துறு முகமும், பார்வையும், வார்த்தையும் அதில் பக்குவத்தையும் வைத்திருப்பவள் ஷக்தி. அந்த ஷக்திக்காக இப்போதும் ஏங்கும் காதலர்கள் அதிகம்.

ஷக்தி
ஷக்தி

ஷக்தியிடம் கார்த்திக் காதலை சொல்வதில் தொடங்கி படத்தின் க்ளைமேக்ஸ்வரை அவர்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் உரையாடலில் இருவரும் உபயோகிக்கும் வார்த்தைகள் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் இருக்கும். ஆனால் இருவரின் வார்த்தைகளும் அதீத காதலை, பிரிவின் தவிப்பை உணர்த்தும்.

ஒரு பெண் எப்போதும் தனக்குள் ஏற்பட்டிருக்கும் காதலை வெளிப்படையாக சொல்வதில் தயக்கத்தை சுமந்துகொண்டிருப்பாள். அது அவளது சுபாவம் இல்லை இந்த சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் சுபாவம்.

‘அப்படி என்ன காதலிச்ச.... துரத்துன, அப்போ சிரிக்க வெச்ச இப்போ அழ வைக்கிற’ என ஷக்தி கூறும்போது அவள் காதலில் விழுந்துவிட்டதையும், ‘உனக்கு அசிங்கமா மக்கா ஒரு பொண்டாட்டி கிடைக்கணும்’ என்று அவள் கூறும்போது சூழ்நிலையால் ஷக்தி காதலிலிருந்து விலக நினைப்பதையும் லாவகமாக உணர்த்தியிருப்பார். காதலையும் காதலின் பிரிவையும் மிகை உணர்ச்சியில் கோலிவுட் காட்டிக்கொண்டிருந்தபோது, பிரிவு என்பது ஒரு நிகழ்வு அவ்வளவே என்பதை அலைபாயுதே காட்சிப்படுத்தியது.

ஷக்தி, கார்த்திக்
ஷக்தி, கார்த்திக்

எவனோ ஒருவன் வாசிக்கிறான் பாடலுக்கு பிறகு கார்த்திக்கும், ஷக்தியும் சந்தித்துக்கொள்ளும் காட்சியும், அப்போது இருவரும் நிகழ்த்தும் உரையாடலும் வேறு தளத்தில் இருக்கும். முக்கியமாக, கார்த்திக்கை ஷக்தி கண்ட பிறகு அவனுக்கு கொடுக்கும் தன்னுடைய கையிலும், அழுகையிலும் ஷக்தியின் நீண்ட காத்திருப்பும், காதலும் அடங்கியிருக்கும்.

அதுமட்டுமின்றி, ‘ஏன் என்னை தேடி வர இவ்வளவு நாள் ஆச்சு’ என ஷக்தி உரையாடலை ஆரம்பிக்க. “ஷக்தி ஐ லவ் யூ” என கார்த்திக் அதைத் தொடர ஏ.ஆர். ரஹ்மானின் இசையால் ஏற்கனவே தங்களைத் தொலைத்து தேடிக்கொண்டிருந்த ரசிகர்கள், முழுவதுமாக தங்களையும், தங்கள் காதலையும் திரையில் கண்டெடுத்த தருணம் அது.

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்

கார்த்திக் வீட்டாரும், ஷக்தி வீட்டாரும் பேசிக்கொள்ளும் வசனங்கள் இருவீட்டாருக்கும் இடையே இருக்கும் பொருளாதார இடைவெளியையும், பணக்கார தரப்பின் அலட்சியத்தையும், மிடில் கிளாஸின் தன்மானத்தையும் தன்னுடைய அலட்டலின்மை மூலம் காட்டியிருப்பார் மணி. ஏற்கனவே கூறியதுபோல் அலைபாயுதே வசனங்கள் யாவும் மணி குர(றள்)ல்.

ஸ்வர்ணமால்யாவை பெண் பார்க்க வருகையில், யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் ஷக்தியையும் பெண் கேட்க அப்போது, ’ஷக்திக்கு அமெரிக்கா மாப்பிள்ளை வந்திருக்கார் நான் ஷக்திக்கு அமெரிக்கா மேப்தான் வாங்கிக்கொடுக்க முடியும்... நல்ல விஷயம் நடக்கும்போது சில உதவாக்கரைகள் ஒதுங்கிக்கனும்’ என விவேக் பேசும் வசனம், அலைபாயுதேவின் இன்னொரு பரிமாணம்.

அலைபாயுதே
அலைபாயுதே

ஷக்தி தனது வீட்டைவிட்டு கார்த்திக்குடன் கிளம்பும்போது மளிகைக் கடையில் வேலை பார்க்கும் சிறுவனிடம் போய்ட்டு வரேன் என சொல்வதன் மூலம் அவள் மற்றவர்களை எப்படி மதிக்கிறார் என்பது புரியும். மேலும், ஆட்டோவில் 'இனி உனக்கு நான் எனக்கு நீ’ என ஷக்தி கூறுகையில், அவளுடைய வைராக்கியமும், தன்னுடைய காதல் மற்றும் காதல் மேல் வைத்திருக்கும் நம்பிக்கையும் அப்பட்டமாக வெளிப்படும்.

காதல் எப்போதும் ரம்யமான சூழலைத் கொடுக்கும்தான். ஏனெனில், காதலிக்கும்போது அவரவர் குடும்பத்தின் நிழலில் ஒதுங்கிக்கொள்வர். ஆனால் திருமணத்திற்கு பிறகு தனக்கு என்று ஒரு குடும்பம் அமையும்போது அந்த நாட்களை அவர்கள் எப்படி நகர்த்திச் செல்கிறார்கள் என்பதில் அவர்களுடைய காதலின் அர்த்தம் இருக்கிறது.

திருமணத்திற்கு பிறகு இருவருக்கும் எந்தவித பிரச்னைகளும் ஏற்படவில்லையென்றால் அவர்கள் வாழவில்லை அருகருகில் இருக்கிறார்கள் என்று அர்த்தம். ஷக்தியும், கார்த்திக்கும் வாழ்ந்தார்கள். கடற்கரையில் காதலிக்காக இரண்டு மணி நேரம் காத்திருக்க தயார் என்று கூறிய கார்த்திக்தான், சாவியை வெச்சிட்டு போகமாட்டியா என்று திருமணத்திற்கு பின் ஷக்தியிடம் வார்த்தையில் ஒரு கடுகடுப்பை தூவி கொடுப்பான்.

அலைபாயுதே
அலைபாயுதே

காதலிக்கும்போது அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கும். அந்த பயம்தான் காதலை பாதுகாத்து திருமண மேடைவரை அழைத்துவரும். ஆனால், திருமணத்திற்கு பின் என்ன இருந்தாலும் இவள் தனது மனைவிதானே என்ற அலட்சியமும், அபரிமிதமான தைரியமும் மேலோங்கும்போது இதுபோன்ற பிரச்னைகள் வரும். அந்த பிரச்னையின்போது யாரேனும் ஒருவர் விட்டுக்கொடுத்தோ, இல்லை அந்த சீரியஸ் உரையாடலை சிரித்துக்கொண்டே மணம் மாற்றினாலோ அங்கு காதல் இன்னும் இறக்கவில்லை என்று பொருள். அதைத்தான் கார்த்திக்கும், ஷக்தியும் செய்துகொண்டிருந்தார்கள்.

இதில் சில காட்சியில் மட்டும் வந்திருந்தாலும் அழகம்பெருமாள் முக்கியமான இடத்தை ஆக்கிரமித்திருப்பார். ஷக்தி - கார்த்தி இடையே எழும் பிரச்னையின்போது, காதலுக்கும் திருமணத்திற்கும் உள்ள வேறுபாட்டையும், எப்படி வாழ வேண்டும் என்று அவர் சொல்வதையும் எந்தவித தயக்கமுமின்றி அனைவரும் பின்பற்றலாம்.

அழகம்பெருமாள் அட்வைஸ்
அழகம்பெருமாள் அட்வைஸ்

காலண்டரில் சண்டை போடும் நாள்களை குறித்து வைப்பது, பொண்டாட்டி முக்கியமா இல்லை நியூஸ் பேப்பர் முக்கியமா என கேட்பது என ஒரு பெண்ணின் இயல்பும், தாலியை கண்ணாடியில் மாட்டி வைப்பது, காதலுக்கு பின்னான திருமண வாழ்க்கை போர் என்று சொல்வது என ஒரு ஆணின் இயல்பும் அவ்வளவு அழகாக வெளிவந்திருக்கும். மணிரத்னம் ஒரு அலட்டல் இல்லாத படைப்பாளி என்பதை அலைபாயுதே திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு வசனத்திலும் நிரூபித்திருப்பார்.

மணிரத்னத்தின் பங்கு இப்படி என்றால், ஒவ்வொரு ஃபிரேமிலும் காதலையும், கலரையும் கலந்து கொடுத்து பி.சி. ஸ்ரீராம் ஒரு மேஜிக் நிகழ்த்தியிருப்பார். ரஹ்மான் மணிரத்னத்துக்காக எதை பண்ணினாலும் அது காலம் கேட்கும் இசையாக மாறும் என்பதற்கு பெரிய உதாரணம் அலைபாயுதே.

மணியின் ரஹ்மான்
மணியின் ரஹ்மான்

ரஹ்மான் இப்படி என்றால், ‘பழகும்போது குமரியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கை அறையில் குழந்தையாகி என்னை கொல்வாய் கண்ணே’, ‘சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன் நீ சொல்லாததை இரவிலே புரிவேன்’, ‘பூமி தொடா பிள்ளையின் பாதம்’, ‘எல்லா சிவப்பும் உந்தன் கோபம்’, ‘புல்லாங்குழலே, பூங்குழலே நீயும் நானும் ஒரு சாதி; என் உள்ளே உறங்கும் ஏக்கத்திலே உனக்கும் எனக்கும் சரிபாதி’ என வைரமுத்து எழுதிய ஒவ்வொரு வரியும் காதலையும், பிரிவையும், ஏக்கத்தையும், காமத்தையும் காதுக்குள் திரையிட்டு திருவிழா நடத்துகின்றன இன்னமும்.

வைரமுத்து
வைரமுத்து

அலைபாயுதேவின் க்ளைமேக்ஸை இப்போதும் யார் பார்த்தாலும் அவர்கள் மனதில் ஏக்கம், துக்கம், காதல் என கலவையான உணர்வுகள் தோன்றும். பயந்துட்டியா என ஷக்தி கேட்க உயிரே போய்டுச்சு என கார்த்திக் சொல்ல, பொண்டாட்டி போய்ட்டா ஜாலியா இருக்கலாம்னு பார்த்தியா என மீண்டும் ஷக்தி கேட்க அதற்கு கார்த்திக் ஒரு சிரிப்பை பதிலாக கொடுப்பார்.

அதேபோல், கார்த்திக் என்ன பேசினாலும் அதற்கு ஷக்தியின் ஒரே பதில் ’ஐ லவ் யூ’ என்பதுதான். என்ன செய்தாலும், எது நடந்தாலும் காதல்தான் தனது பிராதனம் என்பது ஷக்தி சொல்லும் ஐ லவ் யூவிலும், கார்த்திக்கின் கன்னத்தை நோண்டும் அவளின் ஆள்காட்டி விரலிலும் காதல் ததும்ப ததும்ப இருக்கும்.

அலைபாயுதே
அலைபாயுதே

இருவரும் நேருக்கு நேர் பார்க்கும்போது, “கூந்தல் நெளிவில் எழில்கோல சரிவில் கர்வம் அழிந்ததடி” என்று பின்னணியில் குரல் ஒலிக்க ஷக்திக்கும், கார்த்திக்கும் இடையே இருந்த கர்வம் சுக்குநூறாய் உடைந்திருக்கும்.

இறுதியாக ”A Maniratnam Film” என்று வரும்போது அதனை இப்போது பார்த்தாலும், காதலுக்கு கர்வம் அழகில்லை; காதலுக்கு காதல்தான் அழகு என்பதை உணரலாம். ஆம், தேவையில்லாத கர்வத்தால் பல காதல்கள் இன்னமும் திசை தெரியாமல் ‘அலைபாயுதே’.

இதையும் படிங்க: யாமினிகள் இருக்கிறார்கள்.... மயக்கம் என்ன? நன்றி செல்வராகவன்.... #8YearsofMayakkamEnna

Last Updated : Apr 16, 2020, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.