ETV Bharat / city

தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் 20% இட ஒதுக்கீடு - 8 மாதம் கழித்து ஒப்புதல் அளித்த ஆளுநர்! - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

சென்னை: தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியிடங்களில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதலுடன் அரசிதழில் இன்று (டிச.8) வெளியிடப்பட்டுள்ளது.

20% reservation in government service for those educated in Tamil medium
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் 20% இட ஒதுக்கீடு
author img

By

Published : Dec 8, 2020, 10:26 PM IST

’தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு தமிழ்நாடு அரசின் பணிகளில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் 2010’-யை திருத்தம் செய்ய வழிவகுக்கும் சட்ட திருத்த முன்வடிவை கடந்த மார்ச் 17 ஆம் தேதியன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சர் டி.ஜெயக்குமாரால் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, மசோதாவாக நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதாவானது ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. கடந்த 8 மாதமாக கிடப்பில் இருந்த இந்த மசோதாவுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார்.

20% reservation in government service for those educated in Tamil medium
தமிழில் படித்தவர்களுக்கு அரசுப்பணியில் 20% இட ஒதுக்கீடு

இந்தச் சட்டத்தின்படி, இனி பட்டப்படிப்பு மட்டுமின்றி 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை வழங்கப்படும்.

அதாவது, பட்டப்படிப்பு தகுதிக்கான அரசுப்பணிக்கு, பட்டப்படிப்புடன் 10ஆம் மற்றும் 12ஆம் வகுப்புகளையும் தமிழ்வழியில் படித்திருக்க வேண்டும்.

பட்ட மேற்படிப்பு தகுதிக்கான அரசு பணிக்கு, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பை தமிழ்வழி கல்வி மூலம் பயின்று இருக்க வேண்டும்.

அதேபோன்று, 10ஆம் வகுப்பு தகுதியுள்ள அரசுப்பணிக்கு 6ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தமிழ் வழிக்கல்வியில் பயின்றிருக்க வேண்டும். இனி தமிழ் வழியில் கல்வி பயின்றால் மட்டுமே டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட அரசு பணியில் முன்னுரிமை கிடைக்கும்.

இந்தச் சட்டத்தின்படி, தேர்ச்சிக்கான மதிப்பெண் 45 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இதையும் படிங்க : 'கிராமப்புற நலன் மீது உச்சநீதிமன்றத்திற்கு அக்கறை இல்லையா?' - கே. பாலகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.