ETV Bharat / city

சட்டப்பேரவையில் இன்று 20 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்! - சென்னை:

சட்டப்பேரவையில் இன்று 20 சட்ட மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவை, assembly
சட்டப்பேரவையில் இன்று 20 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றம்.
author img

By

Published : May 10, 2022, 4:16 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஏப்ரல் 6 முதல் இன்று வரை 22 நாட்கள் நடைபெற்று முடிவடைந்தன.
22 நாள் சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, மாநிலத்தில் உள்ள 13 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை மாநில அரசே நியமிக்கும் என்ற சட்ட மசோதா, அரசின் அறிவிக்கைக்கேற்ப சொத்துவரி உயர்வை உள்ளாட்சி அமைப்புகள் நடைமுறைப்படுத்த வகை செய்யும் 1998-ம் ஆண்டின் உள்ளாட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதா,

விதிமுறைகளை மீறும் கிராம ஊராட்சி செயலாளர்கள் மீது நடவடிக்கை வகை செய்யும் மசோதா, சித்த மருத்துவ பல்கலைக்கழக வேந்தராக முதலமைச்சரை நியமிக்கும் மசோதா, வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்கும் மசோதா, சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை அரசே நியமிக்கும் மசோதா உள்ளிட்ட 22 மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

இதில் 13 பல்கலைக்கழக துணைவேந்தர்களை அரசே நியமிக்கும் மசோதாவும், சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவும் ஏற்கெனவே சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சூழலில், ஏனைய 20 மசோதாக்கள் இன்று குரல் வாக்கெடுப்பு மூலம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஏற்கெனவே நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்கள் ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், இன்று நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்களும் ஓரிரு நாட்களில் சட்டத்துறை வாயிலாக ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட உள்ளது.

இதையும் படிங்க: சட்டப்பேரவை நேரலை: காவல் துறை மானிய மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் ஸ்டாலின் பதிலுரை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.